தமிழ்நாடு

கல்யாணம் ஆகாததால் விரக்தி; குழந்தையை கடத்தி வளர்க்க முடியாமல் பஸ் ஸ்டாண்டில் விட்ட இன்ஜினியர்!

திருமணம் செய்து கொள்ள முடியாத விரக்தியில் குழந்தையை கடத்தியதாக கைதான பொறியாளர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

கல்யாணம் ஆகாததால் விரக்தி; குழந்தையை கடத்தி வளர்க்க முடியாமல் பஸ் ஸ்டாண்டில் விட்ட இன்ஜினியர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிஷோர் (44) அவரது மனைவி புத்தினி (39) தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள் உள்ளது.

அம்பத்தூர் தாலுகா அலுவலகம் அருகே புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் தம்பதியினர் குழந்தைகளுடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

கடந்த 6ம் தேதி மாலை தம்பதியினரின் கடைசி ஒன்றரை வயது ஆண் குழந்தை லாக்டவுன் காணாமல் போனது. சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து குழந்தையை தேடி வந்த நிலையில் 8ஆம் தேதி மாலை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் குழந்தை ஒன்று தனியாக இருப்பதாக கோயம்பேடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

கோயம்பேடு காவல்துறையினர் குழந்தையை கைப்பற்றி விசாரணை நடத்தியபோது அம்பத்தூரில் காணாமல்போன குழந்தை என்பதை உறுதி செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கல்யாணம் ஆகாததால் விரக்தி; குழந்தையை கடத்தி வளர்க்க முடியாமல் பஸ் ஸ்டாண்டில் விட்ட இன்ஜினியர்!

குழந்தையை கடத்தியது யார் என்பது தொடர்பாக அம்பத்தூர் காவல் துறையினர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தியபோது.

லாக்டவுனின் தந்தை மற்றும் தாய் வேலை செய்த கட்டுமான நிறுவனத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பொருளாளர் பாலமுருகன் (28) மீது காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

காவல்துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டபோது உடல் ரீதியாக இருந்த பிரச்சினை காரணமாக திருமணம் செய்து கொள்ள முடியாத பாலமுருகன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுஷாந்த் என்பவரின் உதவியோடு குழந்தையை கடத்தி, உள்ளனர்.

குழந்தையை கடத்திய பாலமுருகன் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ள பெண் ஒருவரிடம் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் இரண்டு நாட்களுக்கு குழந்தையை பார்த்துக்கொள்ளும் படி கேட்டுள்ளார்.

இந்தப் பெண்மணி பாலமுருகன் ஏற்கனவே கடலூரில் பணியாற்றிய போது அவருக்கு அறிமுகமானவர், இருப்பினும் பாலமுருகனின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் குழந்தையை பார்த்துக்கொள்ள மறுத்துள்ளார். இதனால் வேறு வழியின்றி காவல்துறையினர் விசாரணை நடத்துவது தெரிந்த பாலமுருகன் குழந்தையை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்றுள்ளார்.

குழந்தை கிடைத்தவுடன் வழக்கை விசாரித்த காவல்துறையினர் உடனடியாக பாலமுருகன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சுஷாந்த் என்பவரையும் கைது செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories