தமிழ்நாடு

இதுக்கெல்லாம் தகராறா? : பணியாரம் ருசி குறித்து குறை கூறிய மனைவி; கழுத்தை நெரித்துக் கொன்ற காதல் கணவன்!

பணியாரம் ருசியாக இல்லையெனக் கூறியதால் ஏற்பட்ட சண்டையில் மனைவியை கணவரே அடித்துக் கொன்ற சம்பவம் சேலத்தில் நடந்திருக்கிறது.

இதுக்கெல்லாம் தகராறா? : பணியாரம் ருசி குறித்து குறை கூறிய மனைவி; கழுத்தை நெரித்துக் கொன்ற காதல் கணவன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலத்தில் உள்ள காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (30). கூலித் தொழிலாளியான இவர் சரண்யா (26) என்ற பெண்ணை பள்ளிப் பருவம் முதலே காதலித்து திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

லட்சுமணனை போல் சரண்யாவும் கூலி வேலைக்கு செல்வது வழக்கம். இருவருக்குமே குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி தம்பதியினரிடையே தகராறு முட்டியிருக்கிறது. லட்சுமணன் வாங்கி வந்த மதுபானத்தை பெரும்பாலும் சரண்யா குடித்து விடுவதால் இதன் காரணமாகவும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறதாம்.

இப்படி இருக்கையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு வந்த லட்சுமணன் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு பணியாரமும் வாங்கி வந்திருக்கிறாராம். அந்த பணியாரம் ருசியாக இல்லை என மனைவி சரண்யா குறை கூற இது மீண்டும் வாய்த்தகராறை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுக்கெல்லாம் தகராறா? : பணியாரம் ருசி குறித்து குறை கூறிய மனைவி; கழுத்தை நெரித்துக் கொன்ற காதல் கணவன்!

அப்போது ஆத்திரமடைந்த லட்சுமணன் சரண்யாவை தாக்கியிருக்கிறார். இதன் காரணமாக சரண்யா உயிரிழந்திருக்கிறார். ஆனால் சாதுர்யமாக ஈரோட்டில் உள்ள மனைவியின் தம்பி நந்தகுமாருக்கு ஃபோன் செய்து உனது அக்கா திடீரென இறந்துவிட்டார் எனக் கூறியிருக்கிறார்.

இதனால் பதட்டமடைந்த நந்தகுமார் சரண்யாவின் வீட்டுக்கு வந்த பார்த்தபோது அவர் சடலமாக கிடந்திருக்கிறார். அப்போது சரண்யாவின் நெற்றியில் காயமும், கை மற்றும் கால்களில் ரத்தமும் இருந்ததால் சந்தேகமடைந்த நந்தகுமார் தீவட்டிப்பட்டி போலிஸாரிடம் லட்சுமணன் மீது புகார் கொடுத்திருக்கிறார்.

இதனையடுத்து சரண்யாவின் உடலை கைப்பற்றிய போலிஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த கையோடு லட்சுமணனை கைது செய்திருக்கிறார்கள். அப்போது போலிஸ் விசாரணையின் போது மனைவி சரண்யாவுடனான சண்டையின் போது அவரை அடித்து கழுத்தை நெறித்துக் கொன்றதை லட்சுமணன் ஒப்புக்கொண்டிருகிறார்.

banner

Related Stories

Related Stories