தமிழ்நாடு

’மண்டைல இருந்த கொண்டைய மறந்த மொமன்ட்’ : பேக்கரியில் கைவரிசை காட்டி சிக்கிய அறிவுஜீவி திருடர்கள்!

பொன்னமராவதி பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரியில் திருடச் சென்ற இருவர் போலிஸாரிடம் சுலபமாக சிக்கியிருக்கிறார்கள்.

’மண்டைல இருந்த கொண்டைய மறந்த மொமன்ட்’ : பேக்கரியில் கைவரிசை காட்டி சிக்கிய அறிவுஜீவி திருடர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நூதனமாக திருட்டுத் தொழில் செய்கிறோம் என்ற பெயரில் எதையாவது செய்து கடைசியில் போலிஸிடம் திருடர்கள் சிக்கித் தவிப்பது தொடர் கதையாகி வருகிறது.

அந்த வகையில்தான் புத்திசாலித்தனமாக செயல்படுவது போல் எண்ணி போலிஸாரின் வேலையை குறைத்து திருடர்கள் இருவர் சிக்கியிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் புதுக்கோட்டையில் நடந்திருக்கிறது. பொன்னமராவதி பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரியில் திருடச் சென்ற இருவர் கடையின் பின்பக்க ஜன்னல் கண்ணாடியை செங்கலால் உடைத்து உள்ளே சென்றிருக்கிறார்கள்.

அப்போது பேக்கரியில் உள்ள கல்லாவில் வைக்கப்பட்டிருந்த பணத்தை ஆட்டையப்போட்ட திருடர் குல திலகங்கள் அறிவுஜீவிகளை போல அங்கிருந்த சிசிடிவி கேமிரா மூலம் சிக்கிடக் கூடாது என எண்ணி கேமராவையும் கம்ப்யூட்டர் மானிட்டரையும் சேர்த்து தூக்கியிருக்கிறார்கள்.

ஆனால் சிசிடிவி காட்சிகளை பதிவு செய்து வைத்துள்ள CPUன் Hard Diskஐ எடுக்காமல் வெறும் மானிட்டரை மட்டும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து அறிந்த பேக்கரி உரிமையாளர் ஹார்ட் டிஸ்கில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளோடு போலிஸில் புகார் கொடுத்திருக்கிறார்.

இதனால் போலிஸார் சுலபமாக பேக்கரியில் கைவரிசையை காட்டியவர்களை பிடித்திருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories