தமிழ்நாடு

போர்வெல் பள்ளத்தில் தேங்கிய கழிவுநீர்.. மூச்சு திணறி பலியான அண்ணன், தம்பி - சோகத்தில் மூழ்கிய ஊர் மக்கள்!

புதுச்சேரி அருகே போர்வெல் போடும்போதுஇரண்டு, பள்ளத்தில் தேங்கிய நீரில் விழுந்த 2 சிறுவர்கள் மூச்சு திணறி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போர்வெல் பள்ளத்தில் தேங்கிய கழிவுநீர்.. மூச்சு திணறி பலியான அண்ணன், தம்பி - சோகத்தில் மூழ்கிய ஊர் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள விழுப்புரம் மாவட்டம் பெரம்பை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இனித்தா. இவர்களுக்கு லெவின் என்கிற நான்கு வயது மகனும், லோகித் என்கிற மூன்று வயது மகனும் உள்ளனர். மாலை நேரத்தில் விளையாட சென்ற இரண்டு சிறுவர்களும் காணவில்லை.

இவர்கள் இருவரையும் தேடியபோது, வீட்டிற்கு பின்புறம் உள்ள காலி நிலத்தில் போர் போடப்பட்டு, அதிலிருந்து வெளியான சேற்றில் விழுந்து இரண்டு சிறுவர்களும் மூச்சற்ற நிலையில் இருந்தனர்.

அருகில்உள்ளவர்கள் உதவியுடன் அவர்களை மீட்டு புதுச்சேரி வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றபோது, இரண்டு சிறுவர்களும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு சிறுவர்கள் போர் போடப்பட்ட பகுதியிலிருந்த சேற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பம் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories