தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தி.மு.க.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 3வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தி.மு.க.!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் வார்டு பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வந்தன.

தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் வார்டு பங்கீடு குறித்து ஆலோசித்தனர்.

தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதில் பெரும்பாலான இடங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று தி.மு.க போட்யிடும் வார்டுகளுக்கான முதற்கட்ட, இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இன்று தி.மு.க போட்டியிடும் 3வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலந்தூர் வடக்கு பகுதி, ஆலந்தூர் தெற்கு பகுதி போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் தாம்பரம் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களும், செங்கல்பட்டு, மறைமலைநகர், குன்றத்தூர், மாங்காடு, நத்திவரம் - கூடுவாஞ்சேரி, திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்பெரும்புதூர் ஆகியே பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவரங்கம், உரையூர், தில்லைநகர், காஜாமலை, கிராப்பட்டி ஆகிய பகுதிகளுக்கும், இலால்குடி, பூவாளூர், கல்லுக்குடி, புள்ளம்பாடி, சிறுகமணி, துவாக்குடி, மணப்பாறை, பொன்னம்பாடி, கூத்தைப்பார், துறையூர், முசிறி ஆகிய நகராட்சிகளுக்கும் வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம், உப்பிலியபுரம், தொட்டியம், காட்டுப்புத்தூர், பாலகிருஷ்ணாம்பட்டி, தாத்தையங்கார்பேட்டை, ச.கண்ணணூர், மண்ணச்சநல்லூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை, ஆரணி, திருவத்திபுரம் (செய்யாறு), வந்தவாசி நகராட்சிக்கும், செங்கம், புதுப்பாளையம், வேட்டவளம், கீழ்பென்னாத்தூர், கண்ணமங்கலம், தேசூர், பெரணமல்லூர்,போளூர், களம்பூர் பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய நகராட்சிகளுக்கும், இலஞ்சி மேலகரம், ஆலங்குளம், குற்றாலம், கீழப்பாவூர், திருவேங்கடம், ஆழ்வார்குறிச்சி, சுந்தரபாண்டியபுரம் ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், சங்கராபுரம், வடக்கனந்தல் பேரூட்சிகளுக்கும், சேலம் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட சேலம் மாநகராட்சி, கண்ணங்குறிச்சி, கடுருப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர் ஆகிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள மாவட்டங்களில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories