தி.மு.க

2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தி.மு.க: ராணிப்பேட்டை, அரக்கோணம் நகராட்சிகளுக்கான வேட்பாளர்கள்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 2வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார்.

2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தி.மு.க: ராணிப்பேட்டை, அரக்கோணம் நகராட்சிகளுக்கான வேட்பாளர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் வார்டு பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வந்தன.

தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் வார்டு பங்கீடு குறித்து ஆலோசித்தனர்.

தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதில் பெரும்பாலான இடங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து தி.மு.க போட்டியிடும் வார்டுகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார்.

அதன்படி, தூத்துக்குடி, கும்பகோணம், காஞ்சிபுரம் மாநகராட்சிகளுக்கான தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். விழுப்புரம், கோவில்பட்டி, திருக்கோவிலூர், கோட்டக்குப்பம் ஆகிய நகராட்சிகளுக்கும் தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

மேலும், மதுராந்தகம், விக்கிரவாண்டி, வளவனூர், திருவெண்ணெய்நல்லூர், அரகண்டநல்லூர், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், ஆடுதுறை, திருபுவனம், வேம்பத்தூர், திருநாகேஸ்வரம், சோழபுரம், சுவாமிமலை, பாபநாசம், அய்யம்பேட்டை, மெலட்டூர், இடைக்கழிநாடு, அம்மாபேட்டை, கழுகுமலை, புதூர், கடம்பூர், எட்டயபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், கருங்குழி, அச்சரப்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளுக்கும் தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, தி.மு.க போட்டியிடும் வார்டுகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் சற்று முன்பு வெளியிட்டார்.

அதில், வேலூர், தஞ்சை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரக்கோணம், இராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, மேல்விஷாரம், சோளிங்கர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, அம்பாசமுத்திரம், களக்காடு, விக்கிரமசிங்கபுரம் ஆகிய நகராட்சிகளுக்கும் தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், கலவை, விளாப்பாக்கம், திமிரி, அம்மூர், திருவலம், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், மூலக்கரைப்பட்டி, நான்குநேரி, ஏர்வாடி, மணிமுத்தாறு, பணகுடி, வடக்கு வள்ளியூர், திசையன்விளை, திருகுறுங்குடி, கோபாலசமுத்திரம், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், பத்தமடை, மேலச்செவல், நாரணம்மாள்புரம், சங்கர் நகர், பெருங்குளம், சாய்புரம், ஏரல், சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம், ஆத்தூர், ஆறுமுகநேரி, கானம், தென்திருப்பேரை, நாசரேத், உடன்குடி ஆகிய பேரூராட்சிகளுக்கும் தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள மாவட்டங்களில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories