தமிழ்நாடு

விபத்தில் மயக்கமடைந்த நபர்.. முதலுதவி அளித்துக் காப்பாற்றிய போலிஸ்: குவியும் பாராட்டு!

விபத்தில் மயக்கமடைந்த நபருக்கு முதலுதவி அளித்துக் காப்பாற்றிய போலிஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

விபத்தில் மயக்கமடைந்த நபர்.. முதலுதவி அளித்துக் காப்பாற்றிய போலிஸ்: குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ பள்ளி அருகே நேற்று இரவு போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். மேலும் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் விதித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, டி.பி சத்திரத்தைச் சேர்ந்த பாபு என்பவர் சாலையைக் கடக்க முயற்சித்தார். அந்நேரம் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார்.

இதைப்பார்த்த காவலர்கள் பிரேமா, சரவணன், சிவராமன், கோவிந்தன் ஆகியோர் உடனே அங்குச் சென்று பார்த்தபோது பாபு மயக்க நிலையிலிருந்தார். பிறகு சற்றும் தாமதிக்காமல் பாபுவின் மார்பில் கைவைத்து அழுத்தி போலிஸார் முதலுதவி அளித்தனர்.பின்னர் பாபு கண்விழித்துப் பார்த்தார்.

இதையடுத்து அவரை போலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் மயக்கமடைந்தவருக்கு முதலுதவி கொடுத்துக் காப்பாற்றிய போலிஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories