தமிழ்நாடு

பார்லரில் வேலை எனக்கூறி சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய திரிபுரா கும்பல் சிக்கியது எப்படி?

திரிபுரா மாநிலத்தில் இருந்து 4 சிறுமிகளை சென்னைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் உட்பட இருவர் கைது.

பார்லரில் வேலை எனக்கூறி சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய திரிபுரா கும்பல் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை பாரிமுனையில் உள்ள லாட்ஜில் 1 பெண் உட்பட 4 நபர்கள், 4 சிறுமிகளுடன் சந்தேகிக்கும்படி தங்கியுள்ளதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் பூக்கடை மகளிர் காவல் நிலையய ஆய்வாளர் தலைமையில் போலிஸார் ஆய்வு செய்தனர்.

அப்போது திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த பெண் சலீமா கத்தூன் என்பவர் மைனுதீன் , அலாவுதின் ஆகியோருடன் சேர்ந்து திரிபுராவில் இருந்து 4 சிறுமிகளை அழைத்து வந்ததும் காவல் துறையினரை கண்டதும் சலீமாவின் கணவர் அன்வர் உசேனுன், மைனுதீனும் தப்பியோடியதும் தெரிய வந்திருக்கிறது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் திரிபுராவில் இருந்து சலீமா கத்தூனும் (41) அவரது கணவர் அன்வர் உசேனும் மைனுதீன், அலாவுதின் உடன் சேர்ந்து அதே மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகவும், மற்ற மூன்று சிறுமிகளிடம் அழகு நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் ஏமாற்றி சென்னைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து போக்சோ, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிந்த பூக்கடை போலிஸார், சலீமா கத்தூனையும், அலாவுதினையும் (23) கைது செய்து அவர்களிடம் இருந்த 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலிஸார் தலைமறைவான அன்வர் உசேன், மைமுதினையும் தனிப்படை போலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories