தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு.. 9வது முறையாக பரோலை நீட்டித்த தமிழ்நாடு அரசு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்த பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மீண்டும் 8வது முறையாக ஒருமாதம் நீட்டிப்பு!

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு.. 9வது முறையாக பரோலை நீட்டித்த தமிழ்நாடு அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆளுநரைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதையடுத்து சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாகச் சிறையிலிருந்த பேரறிவாளனுக்கு பரோல் வழங்குமாறு அவரது தாய் அற்புதம்மாள் கடந்த மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அளித்தார்.

இந்த மனுவை பரிசீலித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 28ம் தேதி ஒருமாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து பரோலில் வந்த பேரறிவாளன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனைத் தொடர்ந்து பரோல் முடியும் போது ஒவ்வொரு முறையும் பேரறிவாளனுக்கு பரோல் மீண்டும் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றோடு பரோல் முடியும் நிலையில் 9 வது முறையாகப் பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories