தமிழ்நாடு

"ஊர்தி புறக்கணிப்பு தமிழக மக்களையே புறக்கணிப்பதாகும்".. ஒன்றிய அரசை கண்டித்து சுப.வீரபாண்டியன் போராட்டம்!

அலங்கார ஊர்தி புறக்கணிப்பை கண்டித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

"ஊர்தி புறக்கணிப்பு தமிழக மக்களையே புறக்கணிப்பதாகும்".. ஒன்றிய அரசை கண்டித்து சுப.வீரபாண்டியன் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் நேற்று (23.01.2022) ஞாயிறு காலை 11 மணிக்கு, இணைய வழியில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், வரும் குடியரசு நாளன்று(ஜனவரி 26) தில்லியில் நடைபெறவிருக்கும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில், தமிழ்நாட்டு ஊர்தி புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்தும், அந்த ஊர்தியினைச் சென்னைக் குடியரசு நாள் அணிவகுப்பிலும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் உலாவரச் செய்வதென்று முடி வெடுத்துள்ள தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் பாராட்டியும் தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

நம் ஊர்தி புறக்கணிக்கப்பட்டது என்பது தமிழர்களையே புறக்கணித்த தாக ஆகும் என்று பேரவை கருதுகின்றது. எனவே குடியரசு நாளான ஜனவரி 26ஆம் நாள்காலை 10 மணிக்கு, தனி மனித இடைவெளியோடும், முகக்கவசங்களோடும்,அறவழியில், சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று மாநகரங்களில், பேரவை யின் அலுவலக வாயில்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.

இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்கு தனித்துவமானதும், தன்னிகரற்றதும் ஆகும்! அதனை மறுக்கவோ, மறைக்கவோ யார் முயன்றாலும் அதனைத் தன்மானமிக்க தமிழர்கள்யாரும் ஏற்க மாட்டார்கள்!

வாருங்கள்... கொடிபிடிப்போம், அணிவகுப்போம், முந்து தமிழ்உணர்வை முழக்கமிட்டு எடுத்துரைப்போம் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories