தமிழ்நாடு

105 ஆண்டுகளுக்கு பிறகு.. 2வது முறையாக ஜனவரியில் தொடரும் மழை - வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன?

வடகிழக்கு பருவமழை காலம் நிறைவு பெற்று இருந்தாலும் ஜனவரி மாதம் 26 முதல் 28-ந்தேதி வரை மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

105 ஆண்டுகளுக்கு பிறகு.. 2வது முறையாக ஜனவரியில் தொடரும் மழை - வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வடகிழக்கு பருவமழை காலம் நிறைவு பெற்று இருந்தாலும், பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்தவகையில் ஜனவரி மாதம்26 முதல் 28-ந்தேதி வரை மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “24.01.2022, 25.01.2022: தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

26.01.2022 : தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

27.01.2022 : தமிழக கடலோர மாவட்டங்கள், அரியலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

28.01.2022 : தமிழக கடலோர மாவட்டங்கள், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

சென்னையை பொறுத்தவரை, டுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories