தமிழ்நாடு

“எனக்கு 18 வயது ஆகும்போது என்னுடைய முதல் ஓட்டே உங்களுக்குத்தான் அங்கிள்” : ஜெய்பீம் புகழ் ஜோஷிகா பேட்டி!

“நான் 18 வயதில் ஓட்டுபோடும் போது நீங்கதான் முதல்வரா இருப்பீங்க” என்று ஜெய் பீம் புகழ் சிறுமி ஜோஷிகா மாயா பேட்டியளித்துள்ளார்.

“எனக்கு 18 வயது ஆகும்போது என்னுடைய முதல் ஓட்டே உங்களுக்குத்தான் அங்கிள்” : ஜெய்பீம் புகழ் ஜோஷிகா பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“நான் 18 வயதில் ஓட்டுபோடும் போது நீங்கதான் முதல்வரா இருப்பீங்க” என்று ஜெய் பீம் படத்தில் அல்லியாக நடித்து புகழ் பெற்ற சிறுமி ஜோஷிகா மாயா, டி.எஸ்.எம். இணைய தளத்திற்கு எதார்த்தமான பேட்டியளித்துள்ளார்.

ஜெய்பீம் புகழ் ஜோஷிகா மாயா சிறுமியின் பேட்டி வருமாறு :-

“மதிப்பிற்குரிய முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம்!

ஜெய்பீம் படத்தில் நடித்த அல்லி பேசுகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நீங்க ‘ஜெய்பீம்’ பிரிவ்யூ ஷோ பார்த்து அவர்களுக்கு பட்டா வழங்கி கொடுத்தீங்க, வீடு கட்டிக் கொடுத்து அவங்க வரலாற்றையே மாத்திட்டீங்க அங்கிள்; குழந்தைகளுக்கெல்லாம் நிறைய நலத்திட்ட உதவிகள் செய்து இருக்கீங்க, நான் உங்ககிட்டே இருந்து நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன், நான் இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய விஷயங்களைக் கத்துப்பேன்.

உங்க ஆட்சியில் நிறைய பேருக்கு நிறைய நலத்திட்ட உதவிகள் நடந்து கிட்டு இருக்கு, இந்த கொரோனா காலத்தில் உங்க உயிரைக்கூட நீங்க பெரிசா எடுத்துக்காம, நீங்க எங்களுக்காக இரவும் - பகலுமா வேலை பார்த்துக்கிட்டு இருக்கீங்க. இந்த மாதிரி முதலமைச்சர் ஐயா கிடைத்ததற்கு நாங்க எல்லாம் பெருமைப்படுகிறோம்.

எனக்கும் ஓட்டுப்போடணும்ன்னு ஆசையா இருக்கு, ஆனா எனக்கு இப்போ 8 வயதுதான் ஆகுது; 18 வயது ஆகும்போது என்னுடைய முதல் ஓட்டே உங்களுக்குத்தான் அங்கிள். அப்பவும் நீங்கள்தான் முதலமைச் சரா இருப்பீங்க! உங்களுடைய நல்லாட்சி தொடரட்டும்!" இவ்வாறு சிறுமி ஜோஷிகா மாயா பேட்டியளித்தார்.

banner

Related Stories

Related Stories