முரசொலி தலையங்கம்

“27% இடஒதுக்கீடு வழக்கில் வெற்றி.. அகில இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் வழிகாட்டி” : ‘முரசொலி’ புகழாரம்!

“தமிழ்நாட்டில் தி.மு.க.வும் சமூகநீதியின்பால் பற்றுக்கொண்ட இயக்கங்களும் நடத்திய போராட்டம், இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

“27% இடஒதுக்கீடு வழக்கில் வெற்றி.. அகில இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் வழிகாட்டி” : ‘முரசொலி’ புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சமூகநீதி வரலாற்றில் மகத்தான தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கி இருக்கிறார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகளான டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியதன் மூலமாக 1980 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய அளவில் நடந்து வந்த போராட்டத்துக்கு ஒரு தெளிவு பிறந்திருக்கிறது. இத்தகைய தெளிவையும் அகில இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் காட்டி உள்ளது.

மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளிலும் - அதற்கான உயர் படிப்புகளிலும் இதர பிற்படுத்தப்பட்டவர்க்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே நமது போராட்டத்தின் உள்ளடக்கம். இதனை முதலில் ஒன்றிய அரசு உணரவில்லை. அதன்பிறகு உணர்ந்து திருந்தியது. ஏற்றுக்கொண்டது.

வழக்கம்போல ‘சிலர்' இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார்கள். அப்போது தமிழ்நாடு அரசும், திராவிட முன்னேற்றக் கழகமும் உச்சநீதிமன்றத்தில் சமூகநீதிக்கான காவல் அரணை அமைத்தது.

முன்னேறிய வகுப்பினருக்கான பொருளாதார இடஒதுக்கீடு குறித்து பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினார்களே தவிர, இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு குறித்து எந்த விவாதங்களையும் கிளப்பவில்லை. ``எட்டு லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் என்று எப்படி நிர்ணயம் செய்தீர்கள், அது குறித்து இறுதி உத்தரவில் பார்க்கலாம், இந்த ஆண்டு மட்டும் 8 லட்சம் என உச்சவரம்பு வைத்துக் கொள்ளுங்கள், இது தொடர்பாக மார்ச் மாதம் விசாரிக்கலாம்’’ என்று நீதிபதிகள் ஒரு அரைப்புள்ளி ( ; ) வைத்துள்ளார்கள்!

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி (.) வைத்துவிட்டார்கள்.

1. We accept the recommendation of the Pandey Committee that the criteria which have been stipulated in OM 2019 be used for 2021-2022 in order to ensure that the admission process is not dislocated;

2. Counselling on the basis of NEET-PG 2021 and NEET- UG 2021 shall be conducted by giving effect to the reservation as provided by the notice dated 29 July 2021, including the 27 per cent reservation for the OBC category and 10 per cent reservation for EWS category in the AIQ seats;

3. The criteria for the determination of the EWS notified by OM 2019 shall be used for identifying the EWS category for candidates who ap- peared for the NEET-PG 2021 and NEET-UG 2021examinations;

4. The validity of the criteria determined by the Pandey Committee for identification of EWS would prospectively for the future be subject to the final result of the petitions; and

5. The petitions shall be listed for final hearing on the validity of the EWS criteria as recommended by the Pandey Committee in the third week of March 2022- என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்கள் நீதிபதிகள்.

இந்தத் தீர்ப்பின் ஐந்தாவது பத்தியில் திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்றுள்ளது. ``திராவிட முன்னேற்றக் கழகத்தின் எண்ணங்களை வழக்கறிஞர் பி.வில்சன் அவர்களிடம் கேட்டோம், தமிழ்நாடு அரசின் கருத்தை அதன் வழக்கறிஞரிடமும் கேட்டோம்’’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

முதன்முதலாக அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு இவ்வாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது என்பதே பெரும் மகிழ்ச்சிக்குரியது. 2005 ஆம் ஆண்டே இது நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். பல்வேறு சக்திகள் முடிந்தவரையில் முட்டுக்கட்டை போட்டு வந்தார்கள். 2005ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டத்தின் 93 ஆவது திருத்தமாக வந்தது. அடுத்த ஆண்டே குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கினார்.

நீதிமன்றத்துக்கு ‘சிலர்' போனார்கள். அங்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டது. ஆனாலும் 27 சதவிகித இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட உரிமையை நீதிமன்றத்தின் மூலமாகவே திராவிட முன்னேற்றக்கழகம் பெற்றுத் தந்துள்ளது. இதனுடைய முக்கியமான பலனை தமிழ்நாட்டு முதலமைச்சர் வெளிப்படுத்தி இருக்கிறார். “இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 4,000 மாணவர்கள், ஒவ்வோர் ஆண்டும் இதன்மூலம் தங்களுடைய உரிமையை, பலனைப் பெறுவார்கள்” என்று சொல்லி இருக்கிறார். இது தமிழ்நாட்டுக்குக் கிடைத்த வெற்றி என்றும் முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்.

“தமிழ்நாட்டில் தி.மு.க.வும் சமூகநீதியின்பால் பற்றுக்கொண்ட இயக்கங்களும் நடத்திய போராட்டம், இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. மண்டல் குழுப் பரிந்துரைகள் நடைமுறைக்கு வருவதற்குத் தமிழ்நாடு ஆற்றிய பங்களிப்புக்கு ஈடானது இந்த வெற்றி” என்று அனைவரையும் அந்த புகழ்குடைக்குள் இணைத்துக் கொண்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னால் நீட் தேர்வு குறித்து சட்டமன்றத்தில் விவாதம் நடந்தது. ‘நீட் தேர்வை விலக்க வைக்க தி.மு.க. அரசுக்கு அ.தி.மு.க. துணை நிற்கும். அதே நேரத்தில் நீட் தேர்வை நீக்க முடியுமா?' என்று முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் கேட்டார்.

‘போராடித்தான் சமூக நீதியை வென்றுள்ளோம். போராடாமல் எதுவும் கிடைக்காது' என்று முதலமைச்சர் கம்பீரமாகச் சொன்னார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட சமூகநீதி சக்திகளின் போராட்டத்தின் மூலமாக இந்தத் தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. இத்தகைய போராட்டத்தையும் தீர்ப்பையும் வரலாறு வாழ்த்தும்!

banner

Related Stories

Related Stories