இந்தியா

சிங்கம் சூர்யாவை போல் மீசை வைத்த போலிஸ் கான்ஸ்டபிளுக்கு வந்த வினை.. நடந்தது என்ன?

மத்திய பிரதேசத்தில் முறுக்கு மீசை வைத்திருந்த கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சிங்கம் சூர்யாவை போல் மீசை வைத்த போலிஸ் கான்ஸ்டபிளுக்கு வந்த வினை.. நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச காவல்துறையின் சிறப்பு பொது இயக்குநருக்கு வாகன ஓட்டுநராக இருந்து வருகிறார் கான்ஸ்டபிள் ராகேஷ் ராணா. இவர் சிங்கம் படித்தில் நடிகர் சூர்யா வைத்திருந்த பெரிய மீசைபோல் வைத்துள்ளார்.

இந்த மீசையை வெட்ட வேண்டும் என உயரதிகாரிகள் அவரிடம் கூறியுள்ளனர். ஆனால் அவர் தனது மீசையை வெட்டாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து கான்ஸ்டபிள் ராகேஷ் ராணா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஐ.ஜி. பிரசாந்த், 'கான்ஸ்டபிள் ராகேஷ் ராணாவிடம் அவரது மீசையை வெட்ட அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், அவர் மீசையை வெட்டவில்லை. அதிகாரிகளின் உத்தரவைப் பின்பற்றவில்லை. பெரிய மீசை வைப்பதில் பிடிவாதமுடன் இருந்ததால் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளோம்' என தெரிவித்துள்ளார். இது குறித்து ராகேஷ் ராணா கூறுகையில், "எனது மீசையை வெட்டமாட்டேன். என் மீசைதான் எனது பெருமை" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories