இந்தியா

"முழு ஊரடங்கு கிடையாது".. ஆனால் டெல்லி மக்களுக்கு முதல்வர் கெஜ்ரிவாலின் எச்சரிக்கை என்ன?

டெல்லியில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

"முழு ஊரடங்கு கிடையாது".. ஆனால் டெல்லி மக்களுக்கு முதல்வர் கெஜ்ரிவாலின் எச்சரிக்கை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 1.50 லட்சம் பேருக்கு மேல் புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக,மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் கொரோனா தொற்று பரவலின் வேகம் காட்டுத்தீ போல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா இரண்டாவது அலையின் போது தினசரி தொற்றால் 26,169 பேர் பாதித்ததே அதிகமாகும். ஆனால் தற்போது தினந்தோறும் 20 ஆயிரத்திற்கு மேல் தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது அம்மாநில மக்களை அச்சமடைய செய்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "நாங்கள் ஊரடங்கு கொண்டு வர விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து காணொலி வாயிலாகக் கூறுகையில், டெல்லியில் தினசரி பாப்பு காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

"முழு ஊரடங்கு கிடையாது".. ஆனால் டெல்லி மக்களுக்கு முதல்வர் கெஜ்ரிவாலின் எச்சரிக்கை என்ன?

அடுத்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க அரசு தயாராக உள்ளது.

மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்க வேண்டும்.

அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசிகளை விரைவாக அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும். இதனை டெல்லி மக்கள் சரியாக கடைப்பிடித்தால் முழு ஊரடங்கு போட வாய்ப்பு இருக்காது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories