தமிழ்நாடு

கொரோனா அச்சம்.. குடும்பமே விஷம் குடித்து தற்கொலை முயற்சி - தாய், மகன் பலி: நடந்தது என்ன?

கொரோனா அச்சத்தால் தாய் மற்றும் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சம்.. குடும்பமே விஷம் குடித்து தற்கொலை முயற்சி - தாய், மகன் பலி: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை மாவட்டம், கல்மேடு எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிகா. இரவது கணவர் பிரிந்து சென்றதை அடுத்து மூன்று வயது மகன் ரித்திஷ் உடன் வசித்து வந்தார்.இவர்களுடன் தாய் லட்சுமி, தம்பி சிபிராஜ் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்நிலையில் ஜோதிகாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலிருந்த அனைவரும் பதட்டமடைந்துள்ளனர். மேலும் தங்களுக்கும் கொரோனா தொற்று வந்துவிடுமோ என்ற அச்சத்திலிருந்துள்ளனர்.

இதையடுத்து நான்கு பேரும் சாணி பவுடரை கரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில், ஜோதிகாவும் அவரது மகன் ரித்திஷ் ஆகிய இரண்டு பேரும் உயிரிழந்தனர்.லட்சுமி, சிபிராஜ் ஆகியோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா அச்சத்தால் குடும்பமே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories