தமிழ்நாடு

“மனைவி கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொலை” : தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.. நடந்தது என்ன?

கடன் தொல்லை காரணமாக மனைவி, குழந்தைகளை கொலை செய்துவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“மனைவி கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொலை” : தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.. நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடன் பிரச்சனையால் தனியார் வங்கி ஊழியர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (42). இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் கடந்த ஒரு வருடமாக குடியிருந்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதகாலமாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.

மணிகண்டன் தனது நண்பர்களிடத்தில் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும் தைத் திருப்பி அடைக்க முடியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது

இதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்துவந்த மணிகண்டன், இன்று தனது மனைவி பிரியா (36), மற்றும் தரண்(10), தாஹன் (1), ஆகியோரை கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மனைவியை கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்துக் கொன்று விட்டு இரு குழந்தைகளையும் தலையணையால் அழுத்திக் கொலை செய்து விட்டு, தானும் வேட்டியால் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை முதலே வீட்டில் இருந்து யாரும் வெளியே வராமல் இருந்தால் அருகிலிருந்த, அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து அவர்களின் வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.

நீண்ட நேரம் கதவு தட்டப்பட்டும், திறக்காத காரணத்தினால் கதவை உடைத்து பார்த்தபோது, வீட்டில் இருந்த 2 குழந்தைகள் உட்பட நான்கு பெரும் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து சென்ற துரைப்பாக்கம் போலிஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

போலிஸாரின் விசாரணையில், மணிகண்டன் கடன் தொல்லை காரணமாக தனது குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories