இந்தியா

பர்சில் இருந்து 50 ரூபாய் எடுத்ததற்காக, 10 வயது மகனை அடித்துக் கொன்ற தந்தை... மகாராஷ்டிராவில் கொடூரம்!

பர்சில் இருந்து 50 ரூபாய் எடுத்ததற்காக மகனை தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பர்சில் இருந்து 50 ரூபாய் எடுத்ததற்காக, 10 வயது மகனை அடித்துக் கொன்ற தந்தை... மகாராஷ்டிராவில் கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பர்சில் இருந்து 50 ரூபாய் எடுத்ததற்காக, 10 வயது மகனை அடித்துக் கொன்ற தந்தை செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்வா நகரில் வசிப்பவர் சந்தீப் பிரஜாபதி (41). இவருக்கு 10 வயதில் மகன், 6 வயதில் மகள் உள்ளனர். இவரது மனைவி சற்று மனநலக் குறைபாடுகள் கொண்டவர்.

சந்தீப் பிராஜபதியின் பர்சில் இருந்து அவரது 10 வயது மகன் 50 ரூபாயை எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தீப், மகனை கண்மூடித்தனமாக அடித்துள்ளார்.

மகள் தடுக்க முயன்றும் அடிப்பதை நிறுத்தாத தந்தை பலமாகத் தாக்கியுள்ளார். இதனால் மயங்கி விழுந்த மகனை போர்வையில் சுருட்டி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

அடுத்த நாள் உறவினர் ஒருவர் அவர்களது வீட்டிற்கு வந்து வெகுநேரமாகக் கதவைத் தட்டியும் யாரும் திறக்காததால் அக்கம்பக்கத்தினரிடம் உதவி கேட்டுள்ளார்.

அவர்களது தகவல் அடிப்படையில், போலிஸார் வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து தந்தை மீது கொலை வழக்கு பதிவு செய்த போலிஸார், சந்தீப் பிரஜாபதியை கைது செய்தனர். தந்தை தாக்கியதில் சிறுவனின் உடலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், மண்டை உடைந்ததாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது பர்சில் இருந்து 50 ரூபாய் எடுத்ததற்காக மகனை தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories