தமிழ்நாடு

அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலம் - போலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

அழுகிய நிலையில் பெண்ணின் சடலத்தை போலிஸார் மீட்டது நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலம் - போலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாமக்கல் மாவட்டம், மேற்குவலசு பகுதியில் நாகராஜ் என்பவருக்குச் சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இங்கு அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து போலிஸார் அங்கு சென்று அழுகிய நிலையிலிருந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் உயிரிழந்தவர் குறித்து விசாரணை நடத்தியபோது, திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த செல்வி என்பது தெரியவந்தது.

கணவனைப் பிரிந்த இவர் அண்ணன் பழனிசாமி நடத்திருவம் செங்கல் சூளையில் வேலை செய்து வந்துள்ளார். மேலும், செல்விக்கும் அரவது அண்ணனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6ம் தேதியிலிருந்து செல்வி காணவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில்தான் செல்வியின் உடலை போலிஸார் அழுகிய நிலையில் விவசாய தோட்டத்தில் மீட்டுள்ளனர். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்த தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories