தமிழ்நாடு

“பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய சகோதரிகளுக்கு நேர்ந்த சோகம்” : நடந்தது என்ன?

வாகன விபத்தில் சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய சகோதரிகளுக்கு நேர்ந்த சோகம்” : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஈரோடு மாவட்டம், செங்கலப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு ஷாலினி மற்றும் நிஷா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் நிஷாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து லட்சுமி நகர் பகுதியில் உள்ள பஞ்சாபி ஓட்டலில் சாப்பிட்டுள்ளனர். இதில் அவரின் அக்கா ஷாலினியும் உடனிருந்துள்ளார்.

பின்னர் சாப்பிட்டு முடித்துவிட்டு ஷாலினி, நிஷா ஆகியோர் சித்தி மகன் சுபாஷ் என்பவரின் இருசக்கர வாகனத்தில் ஏறி வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது திடீரென பின்னால் வந்த லாரி ஒன்று இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தில் மீது மோதியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே நிஷா, ஷாலினி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும் சுபாஷக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வீடு திரும்பியபோது ஏற்பட்ட வாகன விபத்தில் சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories