தமிழ்நாடு

110 சவரன் நகை; ₹30 லட்சம் போதாதா?: வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய அரசு மருத்துவர் கைது - நடந்தது என்ன?

வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்தியதாக பெண் மருத்துவர் புகாரைத் தொடர்ந்து மார்த்தாண்டதை சேர்ந்த பிரபல அரசு மருத்துவரான அனுப் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

110 சவரன் நகை; ₹30 லட்சம்  போதாதா?: வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய அரசு மருத்துவர் கைது - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஈரோடு அடுத்த கே.கே நகரை சேர்ந்தவர் திவ்யா. அரசு மருத்துவரான இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த பிரபல அரசு மருத்துவரான அனுப் என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது திவ்யா குடும்பத்தினர், அவரது கணவர் அனுப் குடும்பத்தினரிடம் வரதட்சனையாக 110 சவரன் தங்க நகைகளும், வங்கியில் ரொக்கமாக 32 லட்சம் ரூபாயும் செலுத்தி உள்ளனர்.

இந்நிலையில் அனுப் மற்றும் அவரது தந்தை சம்பத் இருவரும் சேர்ந்து மருத்துவர் திவ்யாவிடம் தொடர்ச்சியாக வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இது குறித்து மருத்துவர் திவ்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு தாலுகா காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் வரதட்சனை கேட்டு பெண் மருத்துவர் திவ்யாவை கொடுமைபடுத்தியது உறுதியானதையடுத்து இன்று மருத்துவர் திவ்யாவின் கணவரான பிரபல அரசு மருத்துவர் அனுப்பை போலிஸார் கைது செய்தனர். இதனிடையே மருத்துவர் அனுப் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறியதால் அவருக்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமணையில் சிகிச்சை அளித்த பிறகு போலிஸார் சிறைக்கு அழைத்து சென்றனர்.

இதனிடையே அவரது தந்தை சம்பத் நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்றதால் அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளார். மருத்துவர் அனுப் இந்திய மருத்துவ சங்கத்தின் இணை செயலாளராக பதவி வகிப்பது குறிப்பிடதக்கது.

banner

Related Stories

Related Stories