தமிழ்நாடு

முன்னறிவிப்பின்றி பள்ளிகளுக்கு விசிட் அடிக்கும் அமைச்சர் அன்பில்; திகைத்துப் போன மாணவர்கள்! (Album)

கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

முன்னறிவிப்பின்றி பள்ளிகளுக்கு விசிட் அடிக்கும் அமைச்சர் அன்பில்; திகைத்துப் போன மாணவர்கள்! (Album)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் பத்தாண்டு காலமாக அதிமுகவினரால் முடங்கிக் கிடந்த துறைகள் அனைத்துக்கும் புத்துயிர் கொடுக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த நாள் முதலே துரிதமாக செயல்பட்டு வருகிறது.

அதற்கேற்றார்போல் முதலமைச்சரின் அறிவுறுத்தல்களுக்கு அனைத்து அமைச்சர்களும் செயல்வடிவம் கொடுத்து திறம்பட செயல்பட்டு வருகின்றனர்.

அவ்வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கக் கூடிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு அவர் சார்ந்த துறையை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

அதுபோக, தாமாக முன்வந்து களத்தில் இறங்கி பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் ஆராய்ந்து வருகிறார்.

அதன்படி தான் செல்லும் இடங்களில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இந்த நிலையில், தஞ்சாவூர் மாட்டத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் திடீர் ஆய்வை மேற்கொண்டார்.

அப்போது பள்ளியை நல்லமுறையில் தரம் உயர்த்தவும், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, அங்குள்ள பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்கள் என அனைவரிடமும் உரையாடினார். மேலும் குழந்தைகளின் கற்றல் திறனை அமைச்சரே நேரடியாக கேட்டறிந்தார்.

முன்னறிவிப்பின்றி பள்ளிகளுக்கு விசிட் அடிக்கும் அமைச்சர் அன்பில்; திகைத்துப் போன மாணவர்கள்! (Album)
முன்னறிவிப்பின்றி பள்ளிகளுக்கு விசிட் அடிக்கும் அமைச்சர் அன்பில்; திகைத்துப் போன மாணவர்கள்! (Album)
முன்னறிவிப்பின்றி பள்ளிகளுக்கு விசிட் அடிக்கும் அமைச்சர் அன்பில்; திகைத்துப் போன மாணவர்கள்! (Album)
முன்னறிவிப்பின்றி பள்ளிகளுக்கு விசிட் அடிக்கும் அமைச்சர் அன்பில்; திகைத்துப் போன மாணவர்கள்! (Album)
முன்னறிவிப்பின்றி பள்ளிகளுக்கு விசிட் அடிக்கும் அமைச்சர் அன்பில்; திகைத்துப் போன மாணவர்கள்! (Album)
முன்னறிவிப்பின்றி பள்ளிகளுக்கு விசிட் அடிக்கும் அமைச்சர் அன்பில்; திகைத்துப் போன மாணவர்கள்! (Album)
banner

Related Stories

Related Stories