தமிழ்நாடு

வீடு வாடகைக்கு எடுத்து சூதாடிய கும்பல்.. 11 பெண்கள் உட்பட 12 பேரை சுற்றிவளைத்த போலிஸ் : நடந்தது என்ன?

வீடு வாடகைக்கு எடுத்து சூதாடிய கும்பலை போலிஸார் கைது செய்தனர்.

வீடு வாடகைக்கு எடுத்து சூதாடிய கும்பல்.. 11 பெண்கள் உட்பட 12 பேரை சுற்றிவளைத்த போலிஸ் : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சேத்துப்பட்டு, எஸ்.எம். நகர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவதாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அப்பகுதியில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு வீட்டில் 11 பெண்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தைப் பார்த்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் வீடு வாடகைக்கு எடுத்து நீண்ட நாட்களாகப் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 11 பெண்கள் உட்பட 12 பேரை போலிஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.18 680ஐ பறிமுதல் செய்தனர். பெண்கள் மட்டும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சேத்துப்பட்டு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories