தமிழ்நாடு

“பெற்றோர் அலட்சியத்தால் பூட்டிய வீட்டில் மாட்டிக் கொண்ட கைக் குழந்தை” : பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை!

வீட்டின் கதவு லாக் ஆனதால் அறையில் மாட்டிக்கொண்ட குழந்தையை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

“பெற்றோர் அலட்சியத்தால் பூட்டிய வீட்டில் மாட்டிக் கொண்ட கைக் குழந்தை” : பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னியாகுமரி மாவட்டம், அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் நிதின். இவரது மனைவி சிந்து. இந்த தம்பதிக்கு இரண்டரை மாத குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு வேலைக்குச் சென்ற கணவர் நிதினை வழியனுப்புவதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார் சிந்து. அப்போது குழந்தை வீட்டில் தூக்கிக் கொண்டிருந்தபோது திடீரென முன்பக்க கதவு தானாக மூடிக்கொண்டது.

இதனால் அதிர்ச்சியைச் சிந்து வீட்டின் கதவைப் பலமுறை திறக்க முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. பின்னர் இதை அறிந்த அக்கம் பக்கத்தினரும் கதவைத் திறக்க முயன்றனர். ஆனால் யாராலும் கதவைத் திறக்க முடியவில்லை.

இது குறித்துத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றனர்.

அப்போது குழந்தை அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது. பிறகு குழந்தையை மீட்டு பெற்றோரிடம் தீயணைப்புத்துறை ஒப்படைத்தனர். மேலும் குழந்தையைக் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர்.

banner

Related Stories

Related Stories