தமிழ்நாடு

IT முதன்மை தலைமை ஆணையராகப் பொறுப்பேற்ற 1987 பேட்ச் IRS அதிகாரி... யார் இந்த கீதா ரவிச்சந்திரன்?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையராக கீதா ரவிச்சந்திரன் பொறுப்பேற்றார்.

IT முதன்மை தலைமை ஆணையராகப் பொறுப்பேற்ற 1987 பேட்ச் IRS அதிகாரி... யார் இந்த கீதா ரவிச்சந்திரன்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையராக கீதா ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுள்ளார்.

1987-ல் வருவாய் பணியில் சேர்ந்த கீதா ரவிச்சந்திரன் 34 ஆண்டுகால பணியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படித்தவர்.

நாக்பூரில் உள்ள நேரடி வரிகளுக்கான தேசிய அகடமியில் பயிற்சி செய்த பிறகு சென்னை, மும்பை, நாக்பூர் மற்றும் பெங்களூரு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றியவர் கீதா ரவிச்சந்திரன்.

மேலும் மதிப்பீடு, தேடல் மதிப்பீடு, தீர்ப்பாயம், பிரதிநிதித்துவம் டிடிஎஸ், விசாரணை, மத்திய கட்டணம், சர்வதேச வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய பணிகளை வகித்திருக்கிறார் கீதா ரவிச்சந்திரன்.

இந்நிலையில் இன்று, கீதா ரவிச்சந்திரன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

கீதா ரவிச்சந்திரன், கலை, இலக்கியம், இசை ஆகிய துறைகளில் நாட்டம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories