தமிழ்நாடு

“10 ஆண்டுகளில் தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

2031ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

“10 ஆண்டுகளில் தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

2031ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.31,000 கோடியில் 9.53 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் CREDAI அமைப்பின் மாநில மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், "3000 ஆண்டுகளுக்கு முன்பு நமது தமிழ் சமூகம் வளர்ந்து இருக்கிறது என்பதை கீழடி அகழாய்வு மூலம் அறிய முடிகிறது. தமிழ்நாட்டில் வீடு, மனைகள் விற்பனை 17 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிலும் செப்டம்பர் மாதத்தில் மட்டும் வீடு, மனை பத்தரப்பதிவு மூலம் ரூ.5,973 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

மாநில பொருளாதார வளர்ச்சி சிறப்பாக முன்னேறி வருவதை குறியீடுகள் காட்டுகின்றன. கடந்த காலாண்டில் தொழிற்சாலைகள், சேமிப்பு கிடங்குகள் 4.4 மில்லியன் சதுர அடி பரப்புக்கு அமைக்கப்பட்டுள்ளன. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது 2 மடங்கு வளர்ச்சி அதிகரித்துள்ளது.

“10 ஆண்டுகளில் தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

கட்டுமானத்துறையில் பல புதிய முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. மனைப்பிரிவு, மனைகளுக்கு 60 நாளில் அனுமதி அளிப்பதற்கான ஒற்றைச்சாளர முறை அறிமுகப்படுத்தப்படும் என்றார். தொடர்ந்து பேசிய முதல்வர், தமிழ்நாட்டை 12 மண்டலங்களாக அறிவித்து திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது. மதுரை, ஒசூர் நகரங்களில் விரைவில் நகர வளர்ச்சிக் குழுமங்கள் ஏற்படுத்தப்பட்டும். நகர்ப்புற வளர்ச்சிக்கு ஏற்ப பழைய சட்டங்கள் மறுஆய்வு செய்யப்படும்.

தமிழ்நாட்டில் வீடு, மனைகள் விற்பனை 17 சதவீதம் அதிகரித்துள்ளது. கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம் பேருந்து நிலையங்கள் விரைவில் திறக்கப்படும். மேலும் 2026 முதல் 46வது ஆண்டுக்குள் சென்னையின் வளர்ச்சிக்கான பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். வரைபட அனுமதியின் செல்லத்தக்க காலம் 5 ஆண்டில் இருந்து 8 ஆண்டாக உயர்த்தப்படும்.

2031க்குள் தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் 9.53 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும். நியாய வாடகை வீடுகள் கட்டும் திட்டம் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். நடுத்தர மக்கள் மற்றும் ஏழை வகுப்பினருக்காக குடியிருப்புகளை கட்ட கட்டுமானத்துறையினர் முன்வர வேண்டும்" எனப் பேசினார்.

banner

Related Stories

Related Stories