தமிழ்நாடு

சர்வதேச மலைகள் தினம் : காணாமல் போன 727 ஹெக்டேர் வனப்பகுதி - கார்ப்ரேட்டுக்காக காஷ்மீரைப் பலிகொடுத்த பாஜக!

காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் சுமார் 727 ஹெக்டேர் வனப்பகுதி நிலத்தை பா.ஜ.க அரசு கையக்கப்படுத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச மலைகள் தினம் : காணாமல் போன 727 ஹெக்டேர் வனப்பகுதி - கார்ப்ரேட்டுக்காக காஷ்மீரைப் பலிகொடுத்த பாஜக!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகத்தில் வசிக்கும் மக்கள் தொகையில் 25% மக்கள் மலைகளில் வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் மலைப்பகுதிகளில் உள்ள வளங்களை நம்பியே சமவெளிப் பகுதி மக்கள் நம்பியுள்ளனர். அதிகரிக்கும் மக்கள் தொகையால் ஏற்படும் கால நிலை மாற்றத்தால் அதிக நிலங்கள் கான்கிரிட் தளமாக மாற்றப்பட்டுகிறது.

அதுமட்டுமல்லாது முன்னதாக, சுற்றுச்சூழல் சீர்கேட்டின் காரணமாக உலகம் முழுவதும் அசாதாரணமான வகையில் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஏதோவொரு மூலையில் 23 ஹெக்டேர் நிலம் வளத்தை இழந்தும் மரங்களை இழந்தும் பாலையாகிக் கொண்டிருக்கிறது என ஐ.நா முன்பே எச்சரித்தது.

ஆனால் ஐ.நாவின் எச்சரிக்கையை காதில் வாங்கிக்கொள்ளாத பல பெரிய நாடுகள் காடுகள் அழித்து கார்ப்ரேட்டுக்காக தாரைவார்க்கும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக கடந்த காலங்களில் அமேசான் மழைக்காடுகளில் 72 ஆயிரத்து 843 முறை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயினால் உயிரினங்கள் பல அழிந்துள்ளதாகவும், உயிர்க்கோளத்தின் மறுசுழற்றியே சிதைந்துபோகும் அபாயத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சர்வதேச மலைகள் தினம் : காணாமல் போன 727 ஹெக்டேர் வனப்பகுதி - கார்ப்ரேட்டுக்காக காஷ்மீரைப் பலிகொடுத்த பாஜக!

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகள் அழிந்து வருவது உலக நாட்டு மக்களிடையே விவாதத்தைக் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசாங்கம் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இந்த வனங்களை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் பழங்குடியினர் குற்றச்சாட்டியுள்ளனர்.

அதேபோல் இந்தியாவிலும் காடுகளையும் வனப்பகுதிகளையும் அழிக்கும் நடவடிக்கையில் மோடி அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டில் காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் சுமார் 727 ஹெக்டேர் வனப்பகுதி நிலத்தை ராணுவ தேவை என பா.ஜ.க அரசு கையகப்படுத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட இந்தியாவின், அமைதிப் பள்ளத்தாக்கு, அமைதியும் அழகும் ஒருங்கே இணைந்த இடம் என்றால் அது காஷ்மீர்தான். எப்போதும் பனி சூழ்ந்த மலைப்பகுதியும், இயற்கை எழில் கொஞ்சும் அந்த காஷ்மீரின் வனப்பும் நம்மை கொள்ளை கொள்ளும். இதற்கு பனிகள் நிறைந்த மலைப்பகுதியும் அதன் தொடர் வனப்பகுதிகளுமே காரணம்.

இந்த இயற்கைதான் அம்மாநில மக்களின் வாழ்வாதாரத்துக்கும் சிறந்த அரணாகத் திகழ்கிறது. ஆனால், இந்த நிலைமையை நீடிக்கவிடாமல், கடந்த 2018-ம் ஆண்டு, ஜூன் மாதம் மெஹ்பூபா முப்தி தலைமையிலான அரசுக்கு அளித்த வந்த ஆதரவை, பா.ஜ.க விலக்கிக் கொண்டு அந்த மாநிலத்தின் ஆட்சியைக் கவிழ்த்தது.

சர்வதேச மலைகள் தினம் : காணாமல் போன 727 ஹெக்டேர் வனப்பகுதி - கார்ப்ரேட்டுக்காக காஷ்மீரைப் பலிகொடுத்த பாஜக!

பின்னர் தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவந்தது. அதற்குபிறகு, காஷ்மீருக்கான சிறப்பு மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாகவும் மாற்றப்பட்டது.

இதற்கு முன்னதாகவே, ஆயிரக்கணக்கான ராணுவத்தினரும், துணை ராணுவப்படையினரும் காஷ்மீரில் குவித்து பா.ஜ.க அரசுக்கு எதிரான போராட்டம் நடைபெறாமல் கட்டுப்படுத்தி, அம்மாநிலத்தையே திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றியது. அதுமட்டுமின்றி, காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோரை வீட்டுச் சிறையில் அடைத்தது.

பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கை அனைத்துமே, இயற்கை வளங்களை அழித்து கார்ப்ரேட்டுகளுக்கு ஏற்றபடி அந்த மாநிலத்தை அவர்களிடம் ஒப்படைப்பதற்காகவே என அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டினர். அதனை உறுதிப்படும் வகையில் காஷ்மீரில் உள்ள 727 ஹெக்டேர் வனப்பகுதி நிலங்களை அழித்து ராணுவத்திற்கும் சாலை வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்போவதாக கூறப்பட்டது.

காஷ்மீரில் நிலவிய அசாதர சூழலுக்கு பிறகு அங்கு அதிக அளவிலான ராணுவவீரர்களை குவித்தது. அதனால் அவர்களுக்கு தங்குமிடங்கள் கட்டுகிறோம், சாலை வசதியை ஏற்படுத்துகிறோம் எனக் கூறி வனப்பகுதி நிலங்கள் கையகப்படுத்தியுள்ளது பா.ஜ.க அரசு.

சர்வதேச மலைகள் தினம் : காணாமல் போன 727 ஹெக்டேர் வனப்பகுதி - கார்ப்ரேட்டுக்காக காஷ்மீரைப் பலிகொடுத்த பாஜக!

அதனைத் தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி, அக்டோபர் 2-ம் தேதி 17 மற்றும் 21 தேதிகளில் நடைபெற்ற வனத்துறை ஆலோசனைக்குழு கூட்டத்தில், ராணுவத்தினரின் 198 திட்டங்களின் தேவைக்காக, வனப்பகுதி நிலங்களில் 727 ஹெக்டேர் பகுதியை ராணுவத்தினருக்கு ஒப்படைப்பதற்கு ஒப்புதலை வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

மேலும், இதன்மூலம் பெறப்படும் 60% நிலங்களை சாலை அமைப்பது, இதர கட்டுமான பணிகளுக்கும், 33 சதவிகித நிலங்கள் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரின் தங்குமிடம் அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில், ராணுவத்தினரின் தங்குமிடம் அமையவிருக்கும் 243 ஹெக்டேர் பகுதியில் தான் குல்மார்க் வனவிலங்குகள் காப்பகம், கேமில் ஜீலம் பள்ளத்தாக்கு, சபா மற்றும் ஜம்மு வனப்பகுதிகள் உள்ளன. மேலும், இந்த பகுதியில் சுமார், 1,847 அடர்ந்த மரங்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி, மரங்களை வெட்டுவதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டு , வனத்துறை ஆலோசனைக் குழுவையும் கலைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தனி உரிமைகளோடு இருந்து வந்த காஷ்மீரை எப்படியாவது தங்கள் ஆளுமைக்குக் கீழ் கொண்டு வந்து, அம்மாநிலத்தை கார்ப்ரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதே பா.ஜ.க.,வின் வெறியாக இருந்தது, தற்போது இந்த திட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

banner

Related Stories

Related Stories