தமிழ்நாடு

சர்வதேச மலைகள் தினம் : “நீலகிரியில் 18% மலைகளை அழித்த அ.தி.மு.க அரசு” - இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

கொங்கு மண்டலத்தின் தண்ணீர் தொட்டியாக திகழும் நீலகிரி மலைத்தொடரில், 15 ஆண்டுகளில் பல மலைத்தொடர்கள் அழிக்கப்பட்டு வருவதால் இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளன்

சர்வதேச மலைகள் தினம் : “நீலகிரியில் 18% மலைகளை அழித்த அ.தி.மு.க அரசு” - இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

உலகத்தில் வசிக்கும் மக்கள் தொகையில் 25% மக்கள் மலைகளில் வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் மலைப்பகுதிகளில் உள்ள வளங்களை நம்பியே சமவெளிப் பகுதி மக்கள் நம்பியுள்ளனர்.

அவ்வாறு சிறப்பு வாய்ந்தது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மிக முக்கிய மலைத் தொடராக திகழ்வது நீலகிரி மலைத்தொடர் ஆகும், நூற்றுக்கணக்கான மூலிகை தாவரங்கள், பலநூறு வகையான அரிய வகை செடிகள், பழமை வாய்ந்த மரங்கள், தாவர உண்ணிகள் என நீலகிரி மலைத்தொடரில் உற்பத்தியாகும் தண்ணீர் மூலம் சமவெளிப் பகுதியான ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற சமவெளிப் பகுதிகளுக்கு தண்ணீர் தரும் தண்ணீர் தொட்டியாகநீலகிரி மலைத்தொடர் திகழ்கிறது.

சர்வதேச மலைகள் தினம் : “நீலகிரியில் 18% மலைகளை அழித்த அ.தி.மு.க அரசு” - இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

நீலகிரி மலைத்தொடரின் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழையை நீலகிரி மலைத்தொடர் சேமித்து வைத்து ஆண்டு முழுவதும் நூற்றுக்கணக்கான அருவிகள் மூலம் நீரை வெளியேற்றும். இதனால் ஆண்டு முழுவதும் பவானி அணைக்கு தண்ணீர் செல்லும் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த நீலகிரி மலைத்தொடரில் உள்ள அரியவகை சோலை மர காடுகளை அழிப்பதும், மலைகளை அழித்து சட்டவிரோத காட்டேஜ்கள் அமைப்பதும், விவசாய நிலங்களில் அதிக அளவு ரசாயன மருந்துகளை தெளிப்பதால் நீலகிரி மலைத்தொடரில் இருந்து மண் அரிப்பு ஏற்பட்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருவது தொடர்கதையாக மாறி உள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் காணப்படும் அனைத்து மலைகளும் பசுமையாக காணப்பட்ட நிலையில், தற்போது காணப்படும் மலைத்தொடர் அனைத்தும் காங்கிரட் கட்டடங்களாக மாறி உள்ளது வேதனையின் உச்சம் ஆகும். தொடர்ந்து மலைகள் ஜே.சி.பி போன்ற பெரிய பெரிய இயந்திரங்களைக் கொண்டு அழிக்கப்பட்டு வர சம்பவம் இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச மலைகள் தினம் : “நீலகிரியில் 18% மலைகளை அழித்த அ.தி.மு.க அரசு” - இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

15 ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்தில் 18% மலைகள் அழிக்கப்பட்டுள்ளது வேதனையின் உச்சம் ஆகும். இவ்வாறு அழிக்கப்படும் மலைகளால் , நீலகிரியில் பெய்யும் மழை சராசரி அளவு குறைந்து காணப்படுகிறது இதனால் சமவெளிப் பகுதிகளுக்கு செல்லும் தண்ணீர் ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. அத்துடன் ஆண்டுக்காண்டு நிலச்சரிவும் அதிகரித்துச் செல்வது வேதனையின் உச்சம் ஆகும்.

எனவே இனிவரும் காலங்களிலாவது நீலகிரி மலைத்தொடரின் பயன் மற்றும் அவசியம் கருதி நீலகிரி மலைகளை பாதுகாக்க புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

banner

Related Stories

Related Stories