தமிழ்நாடு

விபத்தில் சிக்கிய இளைஞர்.. முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய செவிலியர்: நடந்தது என்ன?

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய செவிலியருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

விபத்தில் சிக்கிய இளைஞர்.. முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய செவிலியர்: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவாரூர் மாவட்டம், கேட்டூர்தோட்டத்தைச் சேர்ந்தவர் வனஜா. இவர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் வனஜா குடும்பத்துடன் நேற்று மதுக்கூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே வந்த ஆடு ஒன்றின் மீது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் கீழே விழுந்ததில் அவருக்குப் பலத்தகாயம் ஏற்பட்டு மயங்கி இருந்தார். இதைப் பார்த்த செவிலியர் வனஜா உடனே காரை நிறுத்தி அந்த இளைஞரைப் பரிசோதனை செய்துபார்த்தார்.

அப்போது அந்த இளைஞர் ஆபத்தான நிலையிலிருந்ததை உணர்ந்த வனஜனா உடனே அவருக்கு சி.பி.ஆர் என சொல்லப்படும் இதயத்துடிப்பை மீண்டும் இயக்கச் செய்யும் முதலுதவி சிகிச்சை அவருக்கு அளித்தார்.

இதையடுத்து அந்த இளைஞர் கண்விழித்துப்பார்த்தார். பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் செவிலியர் வனஜாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த இளைஞர் கருவாகுறிச்சியை சேர்ந்த வசந்த ஆவார். இவர் மனோராவில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய செவிலியருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories