தமிழ்நாடு

'தடுப்பூசி போட்டாச்சா?'... பேருந்தில் ஏறி மக்களிடம் தகவல்களைக் கேட்டறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

பேருந்தில் ஏறி பொதுமக்களிடம் தடுப்பூசிகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டறிந்தார்.

'தடுப்பூசி போட்டாச்சா?'... பேருந்தில் ஏறி மக்களிடம்  தகவல்களைக் கேட்டறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் இன்று 13வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 2வது தவணையாகத் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மேலும் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போடும் பணியும் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 80% பேர் முதல் தடுப்பூசியும், 45 % பேர் இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் தடுப்பூசி தகவல்கள் பற்றிக் கேட்டறிந்தார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை விழுப்புரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது விழுப்புரம் பேருந்து நிலையம் சென்ற அவர் பேருந்துகளில் ஏறி பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்களா என கேட்டறிந்தார்.

அப்போது, பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்களை அவரிடம் கூறினர். அமைச்சரே நேரடியாக தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்துக் கேட்டது அப்பகுதி மக்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

banner

Related Stories

Related Stories