தமிழ்நாடு

மாமுல் தரமறுத்ததால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய கும்பல்.. கைது செய்து சிறையில் அடைத்த தனிப்படை போலிஸ்!

பல்லாவரம் அருகே மாமுல் கேட்டு தரமறுத்ததால் சரமாரியாக வெட்டிவிட்டு பதுங்கியிருந்த பழைய கொலை குற்றவாளிகள் மூன்று பேரை தனிப்படை போலிஸார் கைது செய்தனர்.

மாமுல் தரமறுத்ததால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய கும்பல்.. கைது செய்து சிறையில் அடைத்த தனிப்படை போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பல்லாவரம் அருகே கஞ்சா விற்பனை செய்து வந்தவர்களிடம் மாமுல் கேட்டு தரமறுத்ததால் சரமாரியாக வெட்டிவிட்டு பதுங்கியிருந்த பழைய கொலை குற்றவாளிகள் மூன்று பேரை தனிப்படை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் ரசாக் (30). இவர் வீட்டிலேயே செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். தனது நண்பர்களான சேக் உமர், யாகூப் ஆகியோருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது நாகல்கேணி அடுத்துள்ள பெரியார் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மூன்று பேரை திடீரென மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் வழிமறித்து யாகூப் யார் என்று கேட்ட சில நிமிடத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக ரசாக்கின் கை மற்றும் தலை பகுதியில் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சங்கர் நகர் போலிஸார் பல்லாவரம் உதவி ஆணையாளர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் தாம்பரம் அடுத்த கடப்பேரி பகுதியில் பதுங்கி இருந்தவர்களை போலிஸார் கண்டறிந்து கைது செய்ய முற்பட்டபோது காவலர் ஒருவரை அரிவாளால் வெட்ட முயன்று அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

அவர்களை விரட்டிப் பிடித்த போலிஸார் நடத்திய விசாரனையில் பழைய கொலை குற்றவாளிகளான பல்லாவரம் பகுதியை சேர்ந்த மதன் (21), பம்மல் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (22) மற்றும் விஜய் (24) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரனையில் கஞ்சா வியாபாரம் செய்து வந்த ரசாக் மற்றும் நண்பர்களிடம் மாமுல் பணம் கேட்டதாகவும் தர மறுத்ததால் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலிஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories