தமிழ்நாடு

“கோப்புகளை வெறும் காகித கட்டுகளாக நினைத்துவிடாதீர்கள்; அதில் ஏழைகளின் துயரம் இருக்கும்”: இறையன்பு பேச்சு!

“எத்தனை பயிற்சிகள் அளித்தாலும் நேர்மையை கற்றுத் தந்துவிட முடியாது. நேர்மையைப் போல மகிழ்ச்சி அளிப்பது வேறு எதுவும் இல்லை” என தலைமைச் செயலர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

“கோப்புகளை வெறும் காகித கட்டுகளாக நினைத்துவிடாதீர்கள்; அதில் ஏழைகளின் துயரம் இருக்கும்”: இறையன்பு பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை அண்ணா நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அரசு அலுவலர் பயிற்சி நிலையம் சார்பில் அரசு அலுவலர்களுக்கான அடிப்படைப் பயிற்சியினை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

அரசு அலுவலர்களுக்கான அடிப்படைப் பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் இறையன்பு உரையாற்றினார். அப்போது அவர், “பயிற்சி என்பது ஒரு தொடக்கம்தான். பயிற்சியைத் தொடர்ந்து தான் எவ்வாறு கோப்புகளை கையாள்கிறோம் என்பது அமையும்.

ஒவ்வொருவரும் கோப்புகளைக் கையாளும்போது, அவற்றை வெறும் காகிதக் கட்டுகளாக நினைத்துவிடாதீர்கள். ஏழைகளின் துயரம் இருக்கும், கைம்பெண்ணின் கண்ணீர் அந்தக் கோப்புகளில் இருக்கும். எத்தனை பயிற்சி கொடுத்தாலும் நேர்மையை கற்றுத் தந்துவிட முடியாது. அதை நீங்கள்தான் கைக்கொள்ள வேண்டும். நேர்மையைப் போல மகிழ்ச்சி அளிப்பது வேறு எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories