தமிழ்நாடு

“சோசியல் மீடியாவை மூடிவிட்டு சோசியல் சயின்ஸ் புத்தகத்தை படிங்க” : மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அட்வைஸ்!

சோசியல் மீடியாவை மூடிவிட்டு சோசியல் சயின்ஸ் புத்தகத்தை படிக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

“சோசியல் மீடியாவை மூடிவிட்டு சோசியல் சயின்ஸ் புத்தகத்தை படிங்க” : மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அட்வைஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். சமூக வலைத்தளங்களின் மூலமாக சுட்டிக்காட்டப்படும் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் நெட்டிசன்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகின்றார்.

கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து இன்று ட்விட்டர் பதிவு செய்து இருந்தார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி. இதற்கு ட்விட்டர் இணையதள வாசிகள் ஏராளமானோர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இதனைக் கண்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் ரீட்விட் செய்தது வைரலாகி வருகிறது. “தம்பிகளா சோசியல் மீடியாவை,(ஃபேஸ்புக்கை) மூடிவிட்டு சோசியல் சயின்ஸ் புத்தகத்தை எடுத்து அமர்ந்து படியுங்கள். நாளை பள்ளியில் தேர்வு உள்ளது” என பதில் அளித்துள்ளார். ஆட்சியரின் இத்தகைய அறிவுறுத்தல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories