தமிழ்நாடு

நடிகர்கள், தொழிலதிபர்களைக் குறிவைத்து ரூ.200 கோடி மோசடி செய்த தம்பதி: போலிஸில் சிக்கியது எப்படி?

நடிகர், தொழிலபதிர்களிடம் ரூ.200 கோடி மோசடி செய்த தம்பதியை போலிஸார் கைது செய்தனர்.

நடிகர்கள், தொழிலதிபர்களைக் குறிவைத்து ரூ.200 கோடி மோசடி செய்த தம்பதி: போலிஸில் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் காந்தி பேடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி ஷில்பாசவுத்ரி. இந்த தம்பதியினர் தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்களைச் சந்தித்து விருந்துக்கு அழைப்பார்கள்.

அப்போது, நாங்கள் தொழில் ஒன்று தொடங்கப் போகிறோம். இதற்குப் பணம் தேவைப்படுகிறது. இதில் நீங்கள் முதலீடு செய்தால், வட்டியுடன் பணத்தை இரட்டிப்பாக்கித் தருகிறோம் என கூறியுள்ளனர்.

இதை நம்பிய தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்கள் பலர் இவர்களுக்குப் பணம் கொடுத்துள்ளனர். இப்படி ரூ.200 கோடி வரை வசூல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த தம்பதிகளால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலிஸில் புகார் கொடுத்தார்.

இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சீனிவாஸ் மற்றும் ஷில்பாசவுத்ரியை கைது செய்தனர். மேலும் யார் யாரிடம் இவர்கள் மோசடி செய்துள்ளார்கள் என்பது பற்றி தீவிரமாக போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories