இந்தியா

போலிஸார் உட்பட 5 பேர் இரும்பு கம்பியால் அடித்து கொலை.. திரிபுராவில் அதிர்ச்சி சம்பவம்!

திரிபுராவில், மனநலம் பாதிக்கப்பட்டவர் 5 பேரை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலிஸார் உட்பட 5 பேர் இரும்பு கம்பியால் அடித்து கொலை.. திரிபுராவில் அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திரிபுரா மாநிலம் கோவாய் மாவட்டத்திற்குட்பட்ட ஷெவ்ரடாலி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் டெப்ராய். இவர் வெள்ளியன்று இரவு திடீரென வீட்டிலிருந்த அவரது இரண்டு மகள்களையும் இரும்பு கம்பியால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர், தனது தம்பியையும் அதே இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். பிறகு பிரதீப் இரும்பு கம்பியுடன் வீட்டிலிருந்து வெளியே வந்து, அந்த வழியாக வந்த ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து ஆட்டோ ஓட்டி வந்தவரையும், அதில் இருந்த அவரது மகனையும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது மகன் பலத்த காயத்துடன் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த கொடூர சம்பவம் அறிந்து ஆய்வாளர் சத்யஜித் முலிக் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, பிரதீப்புடன் விசாரணை செய்து கொண்டிருந்தபோது போலிஸாரையும் அவர் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே காவல் ஆய்வாளர் சத்யஜித் முலி உயிரிழந்தார்.

போலிஸார் உட்பட ஐந்து பேரைக் கொலை செய்த பிரதீப்பை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களாக மனநிலை சரியில்லாமல் பிரதீப் டெப்ராயின் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், பெற்ற மகள் மற்றும் சொந்த தம்பியை அடித்து கொலை செய்தார் என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories