இந்தியா

“எதற்கு எடுத்தாலும் அபராதம் - சொந்த வாகனத்தை தீ வைத்து கொளுத்திய இளைஞர்” : தெலங்கானாவில் நடந்தது என்ன?

போக்குவரத்து காவலர் அபராதம் விதித்தால் தனது இருசக்கர வாகனத்தை தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.

“எதற்கு எடுத்தாலும் அபராதம் - சொந்த வாகனத்தை தீ வைத்து கொளுத்திய இளைஞர்” : தெலங்கானாவில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தைச் சேர்ந்தவர் மக்பூல். வியாபாரியான இவர் பஞ்சாப்சவுக் சாலை சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த போக்குவரத்து போலிஸார் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி இரண்டாயிரம் ரூபாய் அபராதம் வித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மக்பூல், போக்குவரத்து காவலர்களுக்கு முன்பே தனது இருசக்கர வாகனத்திற்கு தீவைத்துக் கொளுத்தினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலிஸார், பிறகு தீயை அணைத்தனர்.

இது குறித்து மக்பூல் கூறுகையில், “கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்கள். தற்போது மீண்டும் விதியை மீறியதாகக் கூறி இரண்டாயிரம் அபராதம் விதித்தார்கள்.

நான் வியாபாரம் தொடர்பாக அவசரமாகச் செல்கிறேன். எனவே சென்று வந்த பிறகு அபராதத் தொகையைக் கட்டுகிறேன் என கூறினேன். ஆனால், அவர்கள் அபராதம் கட்டிய பிறகே வாகனம் எடுத்துச் செல்ல முடியும் என கூறினர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு எனது இருசக்கர வாகனத்திற்குத் தீவைத்துக் கொளுத்தினேன்” என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories