தமிழ்நாடு

கிணற்றுக்குள் மிதந்த கலர் காகிதங்களை எடுக்கும் போது நடந்த விபரீதம்.. மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பலி!

திருச்சி பெரிய மிளகுபாறை அருகே 11 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றுக்குள் மிதந்த கலர் காகிதங்களை எடுக்கும் போது நடந்த விபரீதம்.. மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் இரட்டைமலை (கூலி தொழிலாளி), இவரது மணைவி தனலட்சுமி, இவர்களின் மகள் சிவரஞ்சனி (11). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த காரணத்தினால் பள்ளியில் சேர்க்கவில்லை.

இதன் காரணமாக அவர் அப்பகுதியில் சுற்றித்திரிந்து வந்துள்ளார். இந்நிலையில், சிவரஞ்சனியை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்பதால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் போலிஸார் சிறுமி சிவரஞ்சனியை தேடிவந்தனர். இந்நிலையில், இன்று காலை பெரிய மிளகுபாறை நாயக்கர் தெரு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் சிவரஞ்சனியின் சடலம் மிதந்து உள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கண்டோன்மெண்ட் போலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

போலிஸார் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றி நடத்திய முதற்கட்ட விசாரணையில், அது சேகர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் உள்ள கிணறு என்றும் அவர்கள் மூன்று நாட்களாக வெளியூர் சென்று உள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் இறந்து போன சிறுமி சிவரஞ்சனி கீழே கிடக்கும் கலர்கலரான காகிதங்களை சேமிப்பதில் ஆர்வம் காட்டுவார் எனக் கூறப்பட்டுகிறது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக கிணறுகுள்ளே எட்டி எடுக்கும் அளவிற்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. அதில் மிதந்த கலர் காகிதத்தை எடுக்க முற்பட்டபோது உள்ளே விழுந்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் கண்டோன்மெண்ட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories