தமிழ்நாடு

“₹1கோடி முந்திரி கடத்தல்.. அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் உட்பட 7 பேர் கைது”: அதிரவைத்த கடத்தல் சம்பவம்!

ராசிபுரம் அருகே தூத்துக்குடியில் இருந்து கடத்தி வந்த 1 கோடி மதிப்பிலான முந்திரி லாரி பறிமுதல் அதிமுக முன்னாள் தொழிலாளர் துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் உள்ளிட்ட 7 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

“₹1கோடி முந்திரி கடத்தல்.. அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் உட்பட 7 பேர் கைது”: அதிரவைத்த கடத்தல் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான முந்திரி ஆலையில் இருந்து 12 டன் எடை கொண்ட 1.10 கோடி மதிப்பிலான முந்திரி லோடு ஏற்றி ஜப்பான் நாட்டிற்கு கொண்டு செல்வதற்காக தூத்துக்குடி துறைமுகத்தை நோக்கி டிரைவர் ஹரி லாரியை ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியை காட்டி லாரியை மடக்கி உள்ளனர். பின்னர் ஓட்டுநர் ஹரி கத்தியை காட்டி மிரட்டி லாரியை கடத்திச் சென்றதாக மேலாளர் ஹரிகரனிடம் தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த ஹரிகரன் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தார்.

இதனை பெற்றுக் கொண்ட தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ்குமார் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் லாரியை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் மர்ம கும்பல் லாரியில் உள்ள GPS கருவியை நீக்கிவிட்டு லாரியை ஓட்டிச் சென்றுள்ளனர்.

பின்னர் தூத்துக்குடியில் இருந்து லாரி நாமக்கல் நோக்கி செல்வதாக தனிப்படையினர் அறிந்துள்ளனர். பின்னர் லாரியை காவல்துறையினர் பின்தொடர்வதை தெரிந்த மர்ம கும்பல் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மேட்டுக்காடு பகுதியில் லாரியை மர்ம கும்பல் நிறுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் திம்மநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சாலையில் நின்ற காரை காவல்துறையினர் விசாரித்தபோது கடத்தலில் ஈடுபட்ட அ.தி.மு.க முன்னாள் தொழிலாளர் துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் ஜெபசிங், விஷ்ணுகுமார், மனோகரன், மாரிமுத்து ராஜ்குமார், செந்தில்குமார் மற்றும் பாண்டி, உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடத்தலில் ஈடுபட்ட கார் மற்றும் லாரியை தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ்குமார் தலைமையிலான காவல்துறையினர் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும் ஹரிகரன் புகார் அளித்து 12 மணி நேரத்தில் லாரியை காவல்துறையினர் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories