தமிழ்நாடு

விவசாயிகள் போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்த மக்கள் முதல்வர்: நேரில் நன்றி கூறி சீக்கியர்கள் நெகிழ்ச்சி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து குருத்வாரா தலைவர்கள் நன்றி கூறியுள்ளனர்.

விவசாயிகள் போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்த மக்கள் முதல்வர்: நேரில் நன்றி கூறி சீக்கியர்கள் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் தெரிவித்துள்ள நிலையில். விவசாயிகளின் போராட்டத்திற்கு தொடர்ந்து துணை நின்று வரும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் சென்னை குருத்வாரா சார்பில் சீக்கிய விவசாயிகள் சங்கத்தினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது குருத்வாரா தலைவர் ஹர்பன்ஸ் சிங், மஞ்சித் சிங் சேதி, ரவிந்தர் சிங் மாதோக், பிரமிந்தர் சிங் ஆனந்த் ஆகியோர் ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் உடனிருந்தார்

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய சட்டமன்ற உறுப்பினர் எழிலன் :-

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த ஆண்டு திமுக வள்ளுவர் கூட்டத்தில் கூட்டணி கட்சித்தலைவர்களுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது.

அதே போல் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பிரதமர் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளார். இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சீக்கிய விவசாயிகள் நன்றி தெரிவித்து கொண்டனர் என்றார்.

அவரை தொடர்ந்து பேசிய குருத்வாரா தலைவர் ஹர்பன்ஸ் சிங், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தமிழக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தோம். 700 விவசாயிகளை நாம் இழந்திருந்தாலும் தற்போது வென்றுள்ளோம். இதற்கு துணையாக இருந்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

banner

Related Stories

Related Stories