தமிழ்நாடு

நூலிழையில் உயிர் தப்பிய காவலர்கள்.. ரேஷன் கடத்தல் கும்பலை 2 கி.மீ. வரை விரட்டி பிடித்த எஸ்.ஐ!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வாகனத்தை மறித்த எஸ்.ஐ. மீது மோத முயன்ற ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை போலிஸார் தேடி வருகின்றனர்.

நூலிழையில் உயிர் தப்பிய காவலர்கள்.. ரேஷன் கடத்தல் கும்பலை 2 கி.மீ. வரை விரட்டி பிடித்த எஸ்.ஐ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே குமாரக்குறிச்சி பகுதியில் போக்குவரத்து எஸ்.ஐ பார்த்திபன் தலைமையில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி வழியே வந்த சரக்கு வாகனம் ஒன்று இளையாக்குடியை நோக்கி வேகமாக வந்துள்ளது. அப்போது வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ பார்த்திபன் வாகனத்தை மறிக்க முயன்றுள்ளார்.

ஆனால் அவர் மீது மோதுவதற்கு வாகனம் வருவதை உணர்ந்து எஸ்.ஐ பார்த்திபன் சாலையை விட்டுக் கிழே இறங்கினார். இதனையடுத்து வாகனம் நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து போலிஸார் தன்னுடைய இருக்கர வாகனத்தில் 2 கி.மீ. வரை விரட்டிச் சென்றனர்.

இதையடுத்து இரு வாகனங்களையும் நிறுத்திவிட்டு அதில் வந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். மேலும் சரக்கு வாகனத்தைச் சோதனையிட்டபோது 25 கிலோ எடையுள்ள 40 மூட்டைகள் இருந்தன. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலிஸார், குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலிஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும் எஸ்.ஐ. மீது மோத முயன்ற ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories