தமிழ்நாடு

“எதுவும் தெரியாமல் அறிக்கை விடுவது எடப்பாடி பழனிச்சாமிக்கு வாடிக்கையாகிவிட்டது” : அமைச்சர் மா.சு சாடல்!

எந்த கணக்கும் தெரியாமல் அறிக்கை விடுவது என்பது அவருக்கு வாடிக்கையான ஒன்றானது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடியுள்ளார்.

“எதுவும் தெரியாமல் அறிக்கை விடுவது எடப்பாடி பழனிச்சாமிக்கு வாடிக்கையாகிவிட்டது” : அமைச்சர் மா.சு சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையில் இன்று நடைபெறும் மெகா சிறப்பு தடுப்பூசி முகாமினை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எண்ணூரில் தொடங்கி வைத்தார். எண்ணூர் தாழாங்குப்பம் பகுதியில் கத்திவாக்கம் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற முகாமை தொடங்கி வைத்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து பார்வையிட்டார்.

இதில், சென்னை மாநகர ஆணையர் ககன்தீப்சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து திருவெற்றியூர் சண்முகபுரம் வடிவுடை அம்மன் கோவில் தெரு, எர்ணாவூர், மாதவரம் உள்ளிட்ட எட்டு இடங்களில் தடுப்பூசி முகாமை பார்வையிடுகிறார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாடு முழுவதிலும் 50 ஆயிரம் மையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 1,600 இடங்களில் சிறப்பு முகாம்கள் துவங்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி பொருத்தவரை 2 லட்சம் என்ற இலக்கோடு இன்று காலை இந்த முகாம் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொருத்தவரை நேற்றிரவு வரை 6 கோடியே 49 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.

இதில் முதல் தவணை தடுப்பூசி போட்ட வர்களுடைய எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சம் எண்பத்தி ஓராயிரம் பேர் 75 சதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. 2 கோடியே 17 லட்சத்து 36 ஆயிரத்து இரண்டாவது தவணை செலுத்தப்படுவது இது 38 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இன்று 10 வது முகாம் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முகாமைப் பொறுத்த வரை ஏறத்தாழ 1 கோடியே 37 லட்சத்து 90 ஆயிரத்து 255 தடுப்பூசிகள் உடன் இந்த முகாம் தொடங்கப்பட்டுள்ளன. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துபவர்கள் எண்ணிக்கை ஏறத்தாழ 72 லட்சம் அளவில் இருக்கின்றன.

72 லட்சம் பேருக்கும் இந்த தகவல் சொல்லப்பட்டு மாநகராட்சி உள்ளாட்சி அமைப்புகளும் மக்கள் நல்வாழ்வு துறையும் ஒருங்கிணைந்து இன்று இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து அறிவித்து முகாமுக்கு அழைத்து வரும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். வாரத்திற்கு இரு முறை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

பத்தாவது முகாமாக நடைபெற்று வருகின்றன தமிழகத்தைப் பொருத்தவரை மழைக்காலத்தில் 10 நாட்களுக்கும் மேலாக பெரிய அளவிலான வடகிழக்கு பருவமழை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பிற்கு சென்னையில்தான் அதிக அளவு மழைப்பழிவு அதிக அளவில் பாதிப்பு என இருந்த நிலையில் தமிழக முதல்வர் தீவிர வழிகாட்டுதலின்படி கடந்த 7ஆம் முதல் தேதி 20 ஆம் தேதி வரை 62 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி சாதனை படைக்கப் பட்டுள்ளன

சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் 9 ஆயிரத்து 623 இடங்களில் அதிக இடங்களில் நடைபெற்றன. இந்த ஆண்டு 38ஆயிரத்து 566 இடங்களில் மழைக்கால முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு அதில் 14 லட்சத்து 89 ஆயிரத்து 884 பேர் இன்று மருத்துவ பயன் பெற்றுள்ளனர்.

மருத்துவ முகாம்களில் கொரொனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி கடந்த 10ஆம் தேதி தொடங்கி நேற்று இரவு வரை நாற்பத்தி எட்டு லட்சத்து 76 ஆயிரத்து 47 பேருக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி பணிகள் நடைபெற்று வருகின்றன.

உண்மையை தெரிந்து கொள்ளாமல் அறிக்கை விடுவதில் மன்னன் முன்னாள் முதல்வர் எடப்பாடி அம்மா மருந்தகங்கள் என்பது கூட்டுறவுத்துறையினால் நடத்தப்படுகின்ற ஒன்று இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே அ.தி.மு.க ஆட்சி காலத்தில் இருந்த மாதங்களை விட இந்த ஐந்து ஐந்து மாதங்களில் கூடுதல் மருந்தகங்களை திறந்து வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கூட்டுறவுத் துறை சார்பில் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. எந்த கணக்கும் தெரியாமல் அறிக்கை விடுவது என்பது அவருக்கு வாடிக்கையான ஒன்றானது. மேலும் அம்மா கிளினிக்குகளை மூடி விட்டால் மக்கள் எதிர்ப்பு எழுந்ததால் இல்லம் தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தை தொடங்கி இருப்பதாக கூறியுள்ளார்.

மொத்தமாக 2000 இடங்களில் அடிப்படை வசதி இல்லாத சிறிய இடங்கள் குறுகிய இடங்கள் கழிவறைகள் என செயல்பட்டு வருகின்றன. மேலும் அறிவிப்பு பலகை கூட இல்லாமல் செயலாற்றுகின்றன. மக்களுக்கு மருத்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யாமல் பேருக்கு திறக்க வேண்டும் என்ற அடிப்படையில் திறந்ததாக குற்றம் சட்டினார்.

முதன்முதலாக மாற்றுத்திறனாளிகள் வீடு தேடிச் சென்று தடுப்பூசி முகாம் போடப்பட்டது கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவது தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. வீடு தேடி தடுப்புச் ஊசி போடும் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே தமிழக அரசு வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அதைத் தொடர்ந்துதான் இந்தியா முழுவதும் வீடு தேடி தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப் பட்டன. வாரம் தோறும் இரண்டு முறை நடைபெறும் முகாம்கள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் மட்டும் தான் இதற்கு அனைத்திற்கும் காரணம் தமிழகத்தில் நடிகர் விவேக் அவர்கள் மரணமடைந்து விட்ட பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் நிலவியது இதனையடுத்து தமிழக முதல்வர் பல்வேறு வகைகளில் நடவடிக்கை எடுத்து பல்வேறு கட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி 75% தடுப்பூசி செலுத்தி கொள்ளும் அளவிற்கு மகத்தான இடத்தை தமிழகம் என்று எட்டி இருக்கிறது என்றால் முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் அது போன்ற நடவடிக்கை ஒன்றுதான் பொதுவான இடங்களில் கூட்டமாக கூடுப்பவர்கள் பொது சுகாதார விதிகளின் அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதாகவும் குறிப்பாக தமிழகத்தில் சிறு குறு தொழில் நிலையங்களில் சுகாதாரத்துறையினர் கடிதங்களை அனுப்பி ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார் என்று உறுதி செய்ய வேண்டும் என கடிதம் அனுப்ப இருப்பதாக தெரிவித்தார்.

பொதுத்துறை நிறுவனங்களிலும் ஊழியர்கள் 100% தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என எடுத்துரைத்தார். இந்திய நாடு ஜனநாயக நாடு என்பதனால் பொது மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களை தனிமை படுத்துகிறார்கள் ஆனால் அது போன்று தமிழகத்தில் செய்ய முடியாது.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை தனிமைப்படுத்துவது என்று அறிக்கை விட முடியாது என தெரிவித்தார். பொது இடங்களில் கூடும் மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற அறிவிப்பினை அடுத்து நேற்றிலிருந்து தனியார் மருத்துவமனைகளில் மக்கள் தானாக முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்” என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories