தமிழ்நாடு

“சத்தியம் வாங்கிய சாமியார் கணவர்.. வீட்டு தோட்டத்தில் உடலை புதைத்த மனைவி” : திடுக்கிடும் சம்பவம்!

நெஞ்சுவலி வந்த கணவனை வீட்டு தோட்டத்தில் உள்ள கோயில் அருகே மனைவி புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“சத்தியம் வாங்கிய சாமியார் கணவர்.. வீட்டு தோட்டத்தில் உடலை புதைத்த மனைவி” : திடுக்கிடும் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் கருணாநிநி நகரில் வசித்த நாகராஜ் - லட்சுமி என்ற தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகனுக்கு திருமணமாகி அமெரிக்காவின் வசித்து வருகிறார். மகள் மட்டும் பெற்றோருடன் இருக்கிறார்.

இந்த நிலையில் முதியவர் நாகராஜ் தனது தோட்டத்தில் கோயில் அமைத்து பூஜை செய்தும் சாமிவந்து அருள்வாக்கு கூறியும் வந்துள்ளார். கடந்த 16 ஆம் தேதி நாகராஜிக்கு நெஞ்சுவலி வந்துள்ளது. அப்போது தனது மனைவி லட்சுமியிடம் தன்னை தோட்டத்தில் உள்ள கோயில் அருகே புதைக்குமாறு சத்தியம் வாங்கியுள்ளார்.

கணவனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற கணவன் நாகராஜை தோட்டத்தில் லட்சுமி புதைத்துள்ளார். வேலை சம்மந்தமாக வெளியூர் சென்று நேற்று வீடு வந்த மகள் தந்தையை காணமல் இருப்பது குறித்து கேட்டபோது நடந்தவைகளை தாய் லட்சுமி கூறியதையடுத்து ஆத்திரமடைந்த மகள் பெரும்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை ஏற்ற போலிஸார் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி மருத்துவமனையின் உடற்கூறு ஆய்வு முடிவை பொருத்தே விசாரணை அமையும் என்று போலிஸார் தெரிவித்தனர். சோழிங்கநல்லூர் தாசில்தார் நேரடி பார்வையில் உடலை மீட்டு பிரோத பரிசோதனை செய்ய போலிஸார் தீவிரம் காட்டிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories