தமிழ்நாடு

அதிகரிக்கும் பவர் பேங்க் செயலி மோசடி.. பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்க தொலைபேசி எண்ணை அறிவித்தது ‘CBCID’ !

பவர் பேங்க் முதலீடு செயலி மூலம் பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்க தொலைபேசி எண்ணை சி.பி.சி.ஐ.டி அறிவித்துள்ளது.

அதிகரிக்கும் பவர் பேங்க் செயலி மோசடி.. பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்க தொலைபேசி எண்ணை அறிவித்தது ‘CBCID’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பவர் பேங்க் முதலீடு செயலி மூலம் பணத்தை முதலீடு செய்தால் குறைந்த காலத்திலேயே அதிக லாபத்தை ஈடுபட்ட முடியும் என்று பலரும் நம்பி பவர் பேங்க் முறையில் முதலீடு செய்து வருகின்றனர்.

இதில் முன்னனுபவம் இல்லாமல், விளம்பரங்களைப் பார்த்து ஆன்ராய்டு செல்போன்களில் இருக்கும் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் எளிதில் பதிவிறக்கம் செய்து பவர் பேங்க்-கில் முதலீடு செய்து வரும் போக்கு சமீபத்தில் அதிகரித்துள்ளது.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சில மோசடிக் கும்பல் நூற்றுக்கணக்கானோரை ஏமாற்றி, அவர்களிடம் இருந்து பல கோடிகள் வரை பணத்தை மோசடி செய்துள்ளனர். இதில் பலரும் தொடர்ச்சியாக மோசடி கும்பலின் வலையில் சிக்கி வருகின்றனர்.

இந்நிலையில், பலரும் தொடர்ச்சியாக புகார்கள் குவிந்து வந்தநிலையில், இத்தகைய மோசடியில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் நோக்கில், இதுதொடர்பான புகார்கள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, காவல் ஆய்வாளர் வசந்தி தலைமையிலான போலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து இந்த வழக்கு ஆதாரங்களையும், தடையங்களையும் திரட்டும் பொருட்டு கிடைக்கப்பெற்ற புகார்களை தாண்டி வேறு யாரேனும் இந்த பவர் பேங்க் முதலீடு செயலி மோசடி கும்பலிடம் பாதிக்கப்பட்டுள்ளனரா? என கோணத்தில் சி.பி.சி.ஐ.டி போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து அவர்களை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கவும் இதுகுறித்து கூடுதல் தகவல்களை தெரிவிக்கவும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியை அணுக ஏதுவாக 9444128512 என்ற தொலைபேசி எண்ணையும், cbcyber@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியையும், நேரில் சந்தித்து பேச ஏதுவாக காவல் ஆய்வாளர், சி.பி.சி.ஐ.டி சைபர் கிரைம் பிரிவு, எண் 220, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008 என்ற விசாரணை அதிகாரியின் முகவரியையும் சி.பி.சி.ஐ.டி போலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories