இந்தியா

"பா.ஜ.கவில் இருந்தால் எந்த குற்றமும் செய்யலாம்.. பரிசும் கிடைக்கும்": யோகி மீது ஓம்பிரகாஷ் கடும் தாக்கு!

பெரிய குற்றம் செய்தால் பெரிய பரிசு பா.ஜ.கவில் கிடைக்கும் என உத்தர பிரதேச அரசியல் தலைவர் ஓம்பிரகாஷ் ராஜ்பர் குற்றம் சாட்டியுள்ளார்.

"பா.ஜ.கவில் இருந்தால் எந்த குற்றமும் செய்யலாம்.. பரிசும் கிடைக்கும்": யோகி மீது ஓம்பிரகாஷ் கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு துவக்கத்திலேயே சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பா.ஜ.க, காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் இப்போதே தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் குற்றம் செய்தால் பா.ஜ.கவில் பெரிய பரிசு கிடைக்கும் என சுகெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறியிருப்பது உத்தர பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த ஓம் பிரகாஷ் ராஜ்பர்," இஸ்லாமியர்கள், தலித்துகளை இலக்கு வைத்து அடக்கி ஒடுக்கி வருகிறது பா.ஜ.க. மேலும் பெரிய மாஃபியாங்களை பா.ஜ.க இனிப்புகள் கொடுத்து ஊக்குவித்து வருகிறது.

முக்தர் அன்சாரியை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தபோதே 8 முறை அவரை சிறையில் சென்று சந்தித்துள்ளனர். அப்போது எல்லாம் பா.ஜ.கவுக்கு இது பிரச்சனையாகத் தெரியவில்லையா?

"பா.ஜ.கவில் இருந்தால் எந்த குற்றமும் செய்யலாம்.. பரிசும் கிடைக்கும்": யோகி மீது ஓம்பிரகாஷ் கடும் தாக்கு!

பா.ஜ.கவில் இருந்தால் என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்யலாம். பெரிய குற்றம் செய்தால் அவர்களுக்குப் பெரிய பரிசு கிடைக்கும். பா.ஜ.கவுடன் கூட்டணியிலிருந்து தேர்தலைச் சந்தித்த போது 12 ஆயிரம் இஸ்லாமியர்கள் வாக்கினால்தான் நான் வெற்றி பெற்றேன். இவர்கள் இல்லை என்றால் அங்கு வெற்றி பெறவே முடியாது.

பா.ஜ.கவுக்கு வாக்கு வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யும். பாலியல் வன்கொடுமையால் இறக்கும் தலித் பெண்களை நள்ளிரவில் எரிப்பார்கள். குற்றவாளிகளை பா.ஜ.க காப்பாற்றும்" என தெரிவித்துள்ளார். இவரின் அந்த பேச்சு உத்தர பிரதேசத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுகெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஷம் பிரகாஷ் ராஜ்புர் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories