தமிழ்நாடு

“எடப்பாடி தொடங்கிய மேட்டூர் அணையின் உபரிநீர் திட்ட கரை உடைப்பு” : அ.தி.மு.க அரசின் டெண்டர் ஊழல் அம்பலம்!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார் மேட்டூர் அணை உபரி நீர் திட்ட மண் கரை உடைப்பு ஏற்பட்டு நீரேற்று நிலையத்திற்கு உள்ளே தண்ணீர் புகுந்ததால் கிராமங்கள் அச்சமடைந்துள்ளனர்.

“எடப்பாடி தொடங்கிய மேட்டூர் அணையின் உபரிநீர் திட்ட கரை உடைப்பு” : அ.தி.மு.க அரசின் டெண்டர் ஊழல் அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மேட்டூர் அணை நிரம்பிய பிறகு வெளியேற்றப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலந்து வந்தது. இந்த நீரை தேக்கி விவசாயத்திற்கும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தவும் ரூ.525 கோடி செலவில் சேலம் மாவட்டத்தில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் துவக்கப்பட்டது.

இதற்காக நீரேற்று நிலையம் மேட்டூர் அணையின் இடது கரை நீர்த்தேக்க பகுதியிலுள்ள திப்பம்பட்டியில் அமைக்கப்பட்டு பணிகள் நடை பெற்று வந்தது . இதற்காக நீர்தேக்கத்திற்கு இயற்கை அரணாக இருந்த சில குன்றுகள் சேதப்படுத்தப்பட்டது. இந்நிலையில், பணிகள் நிறைவடையாமல் அ.தி.மு.க ஆட்சியில் அவசரகதியில் திட்டம் தொடங்கப்பட்டதாகக் கூறி காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் விடப்பட்டது. துவக்க விழாவிற்கு பிறகு தண்ணீர் நிறுத்தப்பட்டது.

தற்பொழுது மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 5-வது நாளாக 119அடியாக நீடித்து வருகிறது. நீரேற்று நிலையத்திற்கு முன்பாக மண் கரை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த மண் கரை நேற்று திடீரென உடைந்தது. தண்ணீர் குபுகுபுவென நீரேற்று நிலையத்திற்கு உள்ளே புகுந்தது.

அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியாக உயர்த்தினால் தண்ணீர் நீரேற்று நிலையத்திற்கு உள்ளே புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டத்தை 124 அடியாக உயர்த்தும்போது அருகில் உள்ள கிராமங்களுக்கும் தண்ணீர் புகுந்து விடுமோ என்று கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே கரையை பலப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories