இந்தியா

“உங்க சகவாசமே வேணாம்..!” : கட்சியில் சேர்ந்த 7 மாதத்தில் BJPல் இருந்து விலகிய பிரபல நடிகை - காரணம் என்ன?

மேற்குவங்க மாநில பா.ஜ.க-வில் இருந்து விலகுவதாக நடிகை ஸ்பரந்தி சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

“உங்க சகவாசமே வேணாம்..!” :  கட்சியில் சேர்ந்த 7 மாதத்தில் BJPல் இருந்து விலகிய பிரபல நடிகை - காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்குவங்க மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது மாநில தலைவர் திலீப் கோஷ் மற்றும் கைலாஷ் விஜயவர்கியா ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க கட்சியில் இணைந்தார் நடிகை ஸ்பரந்தி சட்டர்ஜி.

பின்னர் தேர்தல் பிரச்சாரங்களிலும் தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டார். மேலும் பெஹாலா பாஸ்சிம் தொகுதியிலும் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரிடம் 50, 884 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இதையடுத்து நடிகை ஸ்பரந்தி சட்டர்ஜி பா.ஜ.க நிகழ்வுகள் எதிலும் பங்கேற்காமல் இருந்துவந்தார். இந்நிலையில் பா.ஜ.கவில் இருந்து விலகியதாக ட்விட்டரில் நடிகை ஸ்பரந்தி சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகை ஸ்பரந்தி சட்டர்ஜி ட்விட்டர் பதிவில், "பா.ஜ.க-வுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்கிறேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிக்காகப் போராடினேன். ஆனால் மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காக பா.ஜ.க எவ்விதமான முயற்சியும் எடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்காக நடிகர்கள் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களை பா.ஜ.க.,வில் சேர்த்து தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டது. ஆனால் பா.ஜ.க படுதோல்வியைச் சந்தித்தது. மீண்டும் மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இதையடுத்து பா.ஜ.கவில் சேர்ந்த நடிகர்கள் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் ஒவ்வொருவராகக் கட்சியிலிருந்து விலகி வருகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் பா.ஜ.க.,வில் இருந்து விலகியதாக நடிகைகள் ரூபா பட்டாச்சார்ஜி, அனிந்தியா பானர்ஜி ஆகியோர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகை ஸ்ரபந்தி சட்டர்ஜியும் பா.ஜ.க.,வில் இருந்து விலகியுள்ளார்.

banner

Related Stories

Related Stories