இந்தியா

முஸ்லிம்களை தொழுகை நடத்த விடாமல் சாணத்தை கொட்டி தொல்லை... இந்துத்வா கும்பல் அராஜகம்!

ஹரியானா மாநிலத்தில் முஸ்லீம் மக்களை தொழுகை நடத்த விடாமல் இந்துத்வா கும்பல் தொடர்ந்து அராஜகம் செய்துவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களை தொழுகை நடத்த விடாமல் சாணத்தை கொட்டி தொல்லை... இந்துத்வா கும்பல் அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஹரியானா மாநிலத்தின் குர்கான் பகுதியில் முஸ்லீம் மக்களை தொழுகை நடத்த விடாமல் இந்துத்வா கும்பல் தொடர்ந்து அராஜகம் செய்துவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்துத்வா கும்பலின் அராஜகப் போக்கு அங்கு தலைதூக்கியுள்ளது.

குர்கான் நகரில், தொழுகை நடத்துவதற்காக 2018ஆம் ஆண்டே இந்து மற்றும் முஸ்லிம்கள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒப்பந்தத்தை மதிக்கமால் இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் முஸ்லிம்களை தொழுகை நடத்த விடாமல் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து இன்று முஸ்லிம்கள் தொழுகைக்கு வருவதைத் தெரிந்துகொண்டு நூற்றுக்கணக்கானோர் மைதானத்தின் மையத்தில் அமர்ந்துகொண்டு இதை கைப்பந்து விளையாடும் மைதானமாக பயன்படுத்தப் போகிறோம் திரும்பி சென்று விடுங்கள் என்று மிரட்டி அனுப்பினர்.

கடந்த வாரம் இதே இடத்தில் மாட்டு சாணத்தைக் குவித்து தொழுகை நடத்தவிடாமல் இந்து அமைப்புகள் அராஜகம் செய்துள்ளனர்.

- உதயா

banner

Related Stories

Related Stories