இந்தியா

“நடுரோட்டில் இளம் பெண்ணின் புர்காவை கழற்ற வைத்த இந்துத்வா கும்பல்”: பா.ஜ.க ஆளும் ம.பி-யில் நடந்த அராஜகம்!

மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் இளம் பெண்ணின் புர்காவை இந்துத்வா கும்பல் கழற்றச்சொன்ன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“நடுரோட்டில் இளம் பெண்ணின் புர்காவை கழற்ற வைத்த இந்துத்வா கும்பல்”: பா.ஜ.க ஆளும் ம.பி-யில் நடந்த அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரின் இஸ்லாம் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பெண் நண்பருடம் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த இந்துத்துவா கும்பலைச் சேர்ந்த சிலர், அவர்களது வாகனத்தை வழிமறித்து விசாரித்துள்ளனர்.

இதனா இரண்டு பேரும் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் இருந்தபோது, பின் சீட்டில் அமர்ந்திருந்த இளம் பெண்ணிடம் அவர் அணிந்திருந்த புர்க்காவை கழற்றுமாறு வற்புறுத்தி உள்ளனர். மேலும் புர்க்காவை கழற்றி உன் முகத்தைக் காட்டு எனவும் மிரட்டியுள்ளனர். இதனால் பயத்தில் இளம் பெண்ணும் நடுரோட்டிலேயே தான் அணிருந்த புர்காவை கழற்றியுள்ளார்.

இதில், வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் இந்து எனவும், அந்த பெண் இஸ்லாமியர் எனவும் நினைத்து இத்தகைய செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இருவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவரவும், இனி இதுபோல செய்யக்கூடாது என எச்சரித்து இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக வெளியான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக புகார்கள் எதுவும் வராததால் போலிஸார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில், நடுரோட்டில் இளம் பெண்ணின் புர்காவை கழற்றச் செய்ய வற்புறுத்தியது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories