தமிழ்நாடு

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தங்கை.. தலைமுடியைப் பிடித்து துணிச்சலுடன் காப்பாற்றிய அக்கா : நடந்தது என்ன?

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தங்கையை காப்பாற்றிய அக்காவுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தங்கை.. தலைமுடியைப் பிடித்து துணிச்சலுடன் காப்பாற்றிய அக்கா : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்த வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி சுமதி. இந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி பள்ளி விடுமுறை என்பதால் மூத்த மகள் தேவிஸ்ரீயும், இரண்டாவது மகள் ஹர்ஷினியும் கண்மாய்க்கரைப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அருகே இருந்த குழிக்குள் ஹர்ஷினி தவறி விழுந்துள்ளார். 'அக்கா காப்பாத்து..' என்ற தங்கையின் அலறல் சத்தம் கேட்டு தேவிஸ்ரீ வருவதற்குள் அவரது தங்கை முழுமையாகக் குட்டைக்குள் மூழ்கியுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் அக்கா சற்றும் தாமதிக்காமல் உடனே குட்டைக்குள் கையைவிட்டு தங்கையின் தலைமுடியை இழுத்துப் பிடித்துக் கொண்டு 'காப்பாத்துங்க.. காப்பாத்துங்க...' என அலறியுள்ளார்.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தங்கை.. தலைமுடியைப் பிடித்து துணிச்சலுடன் காப்பாற்றிய அக்கா : நடந்தது என்ன?

இவர்களின் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் உடனே ஓடிவந்து ஹர்ஷினியை குழியிலிருந்து பத்திரமாkஅ மேலே இழுத்தனர். துரிதமாகச் செயல்பட்டு தங்கையின் முடியைப் பிடித்துக் காப்பாற்றிய அக்காவிற்கு அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

இதையடுத்து அந்தக் குழி குறித்து விசாரணை நடத்தியதில், சில மாதங்களுக்கு முன்பு குடிநீருக்காக ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டு, பிறகு மண்ணால் மூடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மண் கரைந்து, ஆழ்துளைக் கிணறு புதைகுழியாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது.

பிறகு வருவாய்த்துறை அதிகாரிகள் ஆழ்துளைக் கிணற்றை முழுவதுமாக மண், மரங்களைப் போட்டு மூடினர். மேலும் இந்த ஆழ்துளைக் கிணறு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories