தமிழ்நாடு

“ஊழல் நிறைந்த அதிமுக ஆட்சியின் சுமையை தீர்த்துக் கொண்டிருக்கிறார் முதல்வர்” : தயாநிதி மாறன் MP பேட்டி !

“கடந்த 10 ஆண்டுகால ஊழல் நிறைந்த அதிமுக ஆட்சியின் சுமையை தற்போது முதல்வர் தீர்த்துக் கொண்டிருக்கிறார்” என தயாநிதி மாறன் எம்.பி., தெரிவித்துள்ளார்.

“ஊழல் நிறைந்த அதிமுக ஆட்சியின் சுமையை தீர்த்துக் கொண்டிருக்கிறார் முதல்வர்” : தயாநிதி மாறன் MP பேட்டி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வடகிழக்கு பருவ மழையினால் சென்னையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கிய நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், துறைமுகம் சட்டமன்ற உறுப்பினரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு ஏற்பாட்டில் தொகுதிக்குட்பட்ட மின்ட் தெருவில் உள்ள சி.எஸ்.ஐ பள்ளியில் மருத்துவ முகாம், அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள மக்களுக்கு மருத்துவ முகாம், மற்றும் வால்டாக்ஸ் சாலை திருப்பள்ளி தெரு சிவான் சி பள்ளியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நாராயணப்ப தெருவில் உள்ள மியாசி மேல்நிலைப்பள்ளியில் மக்களுக்கு அரிசி, பருப்பு அடங்கிய உணவு பொருட்களும், போர்வை, பாய் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், “மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் இந்த பணி தொடர்ந்து நடைபெறும். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் ஊழல் விளைவு தான் இந்த நிலை. இந்த சுமையை தமிழக முதல்வர் ஏற்று, அதனை தீர்த்துக் கொண்டிருக்கிறார். ஊழல் வாதிகளின் பெருச்சாலியாக உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories